Monday, July 8, 2013 ஸஹர் செய்வதின் - TopicsExpress



          

Monday, July 8, 2013 ஸஹர் செய்வதின் சிறப்பு (அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்) இறைவன் நம் அனைவருக்கும் சென்ற வருடங்களை போல் இந்த வருடமும் நோன்பை நிறைவேற்றி தருவானாக!!! ஸஹர் செய்வதின் சிறப்பு புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹு தஆலாவின் வெகுமதிகளும்,பேருபகாரங்களும், எந்த அளவு இருக்கின்றன என்பதை பாருங்கள்.நோன்பின் பரக்கத்தினால் ஸஹர் நேர உணவையும் இந்த உம்மத்தினருக்கு நன்மைக்குரியதாக ஆக்கித் தந்துள்ளான். அதிலும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான். عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ . { يَرْحَمُ اللَّهُ الْمُتَسَحِّرِين } நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக இபுனு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹு தஆலாவும், அவனின் மலக்குகளும் ஸஹர் சாப்பிடுவோரின் மீது அருள் புரிகின்றனர்.(தபரானி) ஸஹர் என்பது ஸுப்ஹுக்குச் சமீபத்தில் உள்ள நேரத்தில் சாப்பிடும் உணவு.அதாவது ஃபஜ்ர் நேரம் ஆரம்பமாகும் முன்பு உணவு உட்க்கொள்ளப்படுவதற்கு ஸஹர் என்று பெயர். عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّحُورُ أَكْلُهُ بَرَكَةٌ فَلَا تَدَعُوهُ وَلَوْ أَنْ يَجْرَعَ أَحَدُكُمْ جُرْعَةً مِنْ مَاءٍ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الْمُتَسَحِّرِينَ ஸஹர் செய்வதில் பரகத் இருக்கின்றது எனவே அதை விட்டு விடாதீர்கள், ஒரு மிடறு தண்ணீரையாவது குடியுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவு உண்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நபிகளார் (ஸல்)அவர்கள் சொன்னதாக அபூ சயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அஹ்மத்) நமக்கும் (யூதர் , கிறிஸ்தவர்களான) வேதக்காரர்களுக்கும் இடயே நோன்பு நோற்பதில் வித்தியாசம் ஸஹர் சாப்பிடுவதுதான். ( فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر ) என்றும் قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَة நீங்கள் ஸஹர் செய்யுங்கள் ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கின்றது என்றும் நபிகளார் (ஸல்) கூறியுள்ளார்கள்.(முஸ்லீம்-புஹாரி) அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே ஹாஃபிழ் இபுனு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ஸஹர் சாப்பிடுவதால் பலவகையான பரக்கத்துகள் உண்டாகின்றன. சுன்னத்தை பின் பற்றுதல், வேதக்காரர்களுக்கு மாறு செய்தல், {ஏனெனில் அவர்கள் ஸஹர் சாப்பிடுவதில்லை.நாம் வேதக்காரரர்களுக்கு மாற்றமாக நடக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டிருக்கிறோம்} இன்னும் வணக்கங்கள் செய்ய சக்தி பெறுதல், வணக்கத்தின் உற்சாகம் அதிகமாகுதல், பசி அதிகமானால் உண்டாகும் தீய குணத்தைத் தடுத்தல், அந்த நேரத்தில் தேவையுள்ள யாசகர் வந்தால் உதவி செய்தல், பக்கத்து வீட்டார் எழ்மையுடையவராக இருந்தால் அவருக்கு உதவுதல், குறிப்பாக அந்த நேரத்தில் துஆ ஏற்கப்படுதல், ஸஹரின் பரக்கத்தால் துஆச் செய்யும் நல்லுதவியும் கிடைத்துவிடுதல், மேலும் அந்நேரத்தில் திக்ரு செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தல் போன்ற பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன, عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ பிலால் (ரலி) அவர்கள் இரவில் பாங்கு சொல்வார்.அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும்வரை நீங்கள் சாப்பிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) அவர்கள் (புஹாரி) நபியவர்கள் பிலால் (ரலி) மற்றும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் ஸஹரின் கடைசின் நேரத்தில் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ரின் தொழுகைக்கானதல்ல, மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பு.அதன் பின்னர் ஃபஜ்ர் நேரம் வந்ததும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வார்கள் இது ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பாகும். பிலால் (ரலி) அவர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வதின் நோக்கம் தூங்கிக் கொண்டிருப்பவகள் எழுந்து வணக்கங்களில் ஈடுபடுவார்கள் பிறகு ஸஹர் செய்வார்கள் மேலும் இரவு முழுவதும் வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் இவ்வறிவிப்பை கேட்டவுடன் வீடு திரும்பி ஸஹர் சாப்பிடக்கூடும் காரணம் சஹாபா பெருமக்கள் நேரத்தின் புனிதத்தை அறிந்தவர்கள். ஸஹர் நேரம் என்பது இஸ்லாமியர்களுக்கு இறைவன் தந்த மாபெரும் அருட்கொடை அதில் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புமிக்கது. இஸ்லாமிய சகோதரர்களே விழிப்புடன் செயல்படுங்கள் இன்று விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு சில இயக்கங்கள் ஸஹர் நேர நிகழ்ச்சியை தொலைகாட்சி மூலம் ஒளிபரப்புகிறார்கள் நல்ல விசயங்களை சொல்லுகிறோம் என்ற பெயரில் நேரத்தின் புனிதத்தை கெடுப்பதோடு நல் அமல்களில் ஈடுபடுவோரின் மனதில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி தானும் அமல் செய்யாமல் மற்றவர்களின் அமலை கெடுக்கும் செயல்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.தயவுசெய்து இது போன்ற நிகழ்சிகள் பார்ப்பதை ஸஹர் நேரத்தில் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது. عن العرباض بن سارية قال : سمعت رسول الله صلى الله عليه و سلم وهو يدعو إلى السحور في شهر رمضان وقال هلموا إلى الغداء المبارك ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அருள் நிறைந்த ஸஹ்ரே வருக! வருக! என்று வரவேற்பார்கள். {அல் இர்ஃபால் பின் சாரியா (ரலி) நஸாயி}. அல்ஹம்துலில்லாஹ் ஸஹ்ரை நாமும் வரவேற்போம் இறைவனின் அருளை பெறுவோம். மவ்லவி J S S. அலி பாதுஷா மன்பயீ ஃபாஜில் ரஷாதி தேரிருவேலி (ஷார்ஜா) jaleela-duwa.blogspot.sg/2013/07/blog-post.html?m=0 https://facebook/Samaiyalattakaasam https://facebook/pages/Chennai-Plaza/156896191130975 Chennai Plaza chennaiplazaik/ Posted by Jaleela Kamal at 10:17 PM
Posted on: Tue, 09 Jul 2013 21:46:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015