அஜித்தின் ’ஆட்டம்’ - TopicsExpress



          

அஜித்தின் ’ஆட்டம்’ தீபாவளிக்கு முன்பே ஆரம்பம்! அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்திருக்கும் ‘ஆரம்பம்’ திரைப்படம் வருகிற தீபாவளியன்று உலகமெங்கும் ரிலீஸாவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆரம்பம் திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளன்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி காஜல் நடித்திருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படமும் ரிலீஸாகிறது. தங்கள் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஆரம்பம் முதலே தமிழகத்தின் முக்கியமான தியேட்டர்கள் பலவற்றை புக் செய்துவிட்டது. அஜித் திரைப்படத்திற்க ு எப்போதுமே இருக்கும் ஓபனிங்கை தவறவிட மனமில்லாத ஆரம்பம் டீம் தீபாவளிக்கு முன்னதாகவே ஆரம்பம் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆரம்பம் திரைப்படம் பெரும்பாலும் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. விஷ்ணுவர்தநஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ஆரம்பம் திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரிலீஸாகி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றுவிட்டால் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்திற்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என்கிறது கோடம்பாக்கம். #viGnesh
Posted on: Mon, 07 Oct 2013 13:35:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015