ஒரு நல்ல கட்டுரை //பிராமண - TopicsExpress



          

ஒரு நல்ல கட்டுரை //பிராமண ஆதிக்கம் ஒழிந்ததால் தலித்துக்கள் ஒன்றும் ஆனந்தக்கூத்தாடவில்லை ஓர் எசமான் போய் இன்னொரு எசமான் வந்தான் அவ்வளவுதான். அவர்கள் அச்சத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது கீழவெண்மணி. அங்கெழுந்தது சாதிப்பிரச்சினை அன்று. விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலவுடைமையாளர்களுக்குமிடையேயான மோதலாகும். ஆனால் பெரியார் எரித்துக்கொல்லப்பட்ட தலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாகக் கொதித்தெழவில்லை. சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் பி ராமமூர்த்தி பிராமணர் என்பதையும் சுட்டிக்காட்டி, பிராமணரல்லாத நிலவுடைமையாளர்களுக்கெதிரான சதி அச்சம்பவம் என்றும் கூறியிருக்கிறார். கீழவெண்மணியில் நீதி என்பதல்லாமல் திமுக ஆட்சிக்கு ஓர் களங்கம் என்பதாகவே அவர் பார்த்திருக்கிறார். ஏதாவது அவப்பெயர் வந்து ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டால் பிராமணர்கள் ஏற்றம் பெறுவர் என்று அவர் அஞ்சியிருக்கவேண்டும். எனவே நீதி அவருக்குப் பெரிதாகப் படவில்லை அண்ணாவின் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதே அவர் கவலையாயிருந்திருக்கிறது. அதே நோக்கில்தான் கருணாநிதி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மெல்ல மெல்ல கட்சியை சீரழித்துக்கொண்டிருந்தபோது அவரை வாரி அணைத்து ’நம்மாள் நீ, கவலைப்படாதே,’ என ஆறுதல் சொன்னார். பொதுவாகவே பிராமண ஆதிக்கம் தகர்ந்து, அரசியலதிகாரத்தை நோக்கி இடைநிலை சாதியினர் நகர்ந்தபோது, தலித்துக்கள் மீதான அழுத்தம் கூடுவதைக் கண்டும் காணாமல் இருந்தார் அவர். ஆக தட்டிக்கேட்டிருக்கவேண்டியவர் தயங்க, இடைநிலை சாதியினர் தங்கள் பிடியை இறுக்கத்தொடங்கினர்.// savukku.net/index.php?option=com_content&view=article&id=1837:2013-06-13-02-23-16&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
Posted on: Tue, 08 Oct 2013 14:34:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015