விண்இன்று பொய்ப்பின் - TopicsExpress



          

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. மு.வ உரை உரை: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். கலைஞர் உரை: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும். சாலமன் பாப்பையா உரை: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தி்ல் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். Translation: If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks oer earths vast ocean-girdled plain. Explanation: If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world. Shared from https://market.android/details?id=com.softcraft.thirukural softcraftsystems
Posted on: Thu, 07 Nov 2013 18:16:53 +0000

Recently Viewed Topics




© 2015