--> "படைத்த வல்லவன், - TopicsExpress



          

--> "படைத்த வல்லவன், ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா!" அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள். அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவைகள் விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவைகளாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக! உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான். (பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். (இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்கும்) ஒன்றையுமே படைக்க முடியாதவைகளைப் போலாவானா! இவ்வளவு கூட நீங்கள் கவனிக்க வேண்டாமா? --> "Is then He Who creates like one that creates not?" It is He who sends down rain from the sky; from it is drink and from it is foliage in which you pasture [animals]. He causes to grow for you thereby the crops, olives, palm trees, grapevines, and from all the fruits. Indeed in that is a sign for a people who give thought. And He has subjected for you the night and day and the sun and moon, and the stars are subjected by His command. Indeed in that are signs for a people who reason. And [He has subjected] whatever He multiplied for you on the earth of varying colors. Indeed in that is a sign for a people who remember. And it is He who subjected the sea for you to eat from it tender meat and to extract from it ornaments which you wear. And you see the ships plowing through it, and [He subjected it] that you may seek of His bounty; and perhaps you will be grateful. And He has cast into the earth firmly set mountains, lest it shift with you, and [made] rivers and roads, that you may be guided, And landmarks. And by the stars they are [also] guided. Then is He who creates like one who does not create? So will you not be reminded? Chapter : An-Nahl Verse : 10-17
Posted on: Wed, 26 Jun 2013 11:55:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015