”Dunamis” என்ற பெயரில் - TopicsExpress



          

”Dunamis” என்ற பெயரில் ஜெர்ஸன் எடின்பரோ நடத்தும் கூட்டத்தின் ஒரு கைப் பிரதி கையில் கிடைத்தது. அதிலிருந்து ஒரு கேள்வியை எனது மனைவியிடம் கேட்டேன்., இந்த வார்த்தை பைபிளில் இருக்கிறதா ? தெரியலையே என்பது போல பார்த்தாள். பிறகு விவரம் சொன்னேன்,”Dunamis” என்பது ஒரு கிரேக்க வார்த்தை, அது ” Dynam / Dynamo / Dynamic / Dynamite ” ஆகிய வார்த்தைகளின் வேரிலிருந்து பிறந்தது. அது அப்போஸ்தலர்.1:8 -ல் இருக்கிறது. ”பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” இதனை சொன்னதும் மனைவியின் கண்கள் மலர்ந்தது. உடனே நான் கேட்டேன், ”இதை நான் ஏற்கனவே உனக்கு சொல்லவில்லையா... ” என்பதாக். அவர்கள் முறுவலித்துவிட்டு சென்றதும் அருகிலிருந்த மகளிடம் சொன்னேன், நம்முடைய மனதில் இரு அறைகள் உண்டு. ஒன்று மேல்தட்டு, இன்னொன்று அடித்தட்டு. இதனை Conscious mind and subconscious mind ஆகிய இரு பிரதான பகுதிகளாகப் பிரிக்கலாம். Conscious mind என்பது மேல்தட்டிலுள்ள உணர்வின் மனிதனாகவும் subconscious mind- எனும் அடித்தட்டு பகுதியானது உற்ற தோழனாகவும் இருக்கிறது. subconscious mind- பகுதியில் நம்முடைய மனம் முக்கியமானது என்று கருதும் எண்ணற்ற தகவல்கள் சேமித்து வைக்கப்படுகிறது. நாம் நடக்கும்போது நம்மோடு நடக்கும் உற்ற நண்பன் அவ்வப்போது நம்மை ஆலோசனை கூறி பாதுகாப்பது போலவே subconscious mind- லிருந்து தகவல்கள் அவ்வப்போது எடுத்து கொடுக்கப்படுகிறது. அதனை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதிலேயே நம்முடைய எல்லா வெற்றிகளும் அடங்கியிருக்கிறது. இதுகுறித்த விவரங்களைத் தேடியபோது கிடைத்த தகவல்களை இப்போது அத்தனை விரைவாக பகிரமுடியாத அளவுக்கு பிரமிப்பாக இருக்கிறது. இதுகுறித்து நம்முடைய ஆண்டவர் சொல்லும்போது, இப்படி சொல்லுகிறார். இது ஆழ்மனதின் நிலைமையைக் குறிக்கிறது. மத்தேயு 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். இதுகுறித்து வாசித்து கிரகித்து நான் எழுத கட்டுரைக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைத்த தொடுப்புகளை இங்கே தருகிறேன். எனதருமை நண்பர்கள் அதனை ருசித்து ரசித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டால் அதுகுறித்து நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ளலாம்., வாழ்த்துக்கள். :) psychology.about/od/cindex/g/def_conscious.htm
Posted on: Mon, 19 Aug 2013 08:55:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015