Facebook என்ன - TopicsExpress



          

Facebook என்ன இளிச்சவாயா.?! ------------------------------------------- கொஞ்ச நாள் முன்னாடி ஒரு Blogல ஒரு தத்துவம் படிச்சேன்.. " நன்றி - முகநூல் "-னு போட்டு இருந்தது.. நானும் சரி முகநூல்னா. அது ஏதோ அகநானூறு., புறநானூறு மாதிரி சங்க இலக்கிய நூல் போலன்னு கம்முன்னு விட்டுட்டேன்.. நேத்து தான் என் Friend ஜனா சொன்னான்.. முகநூல் = Facebook-னு அடப்பாவிகளா.. " Facebook is a Social Network..! " அதாவது அது ஒரு சமூக தளம்.. Facebook-ங்கறது அதோட பெயர்.. பெயரை கூடவா மொழி பேப்பீங்க..? ( தமிழ் வளர்க்குறாங்களாமாம்....! புல்லரிக்குதுப்பா..! ) இப்ப இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் பேரு " Mr. Cook " . அப்ப அவரை இங்கிலாந்து அணி தலைவர் " திரு. சமையல்காரர்னு " தான் சொல்லுவீங்களா...?! நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..! என்னா நியாயம் சார் இது..? இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி.. அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.. அப்புறமா " நாங்க தமிழன் "னு..! சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம். ( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? ) இதுவரைக்கும் நிறைய பேர் இது பத்தி தெரியாம " முகநூல்" னு சொல்லியிருப்பீங்க.. பரவாயில்ல..!! இனிமே திருத்திக்கோங்க..! ஆனா அதை விட்டுட்டு... " நான் Facebook-ஐ முகநூல்னு தான் சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க.. அவ்ளோதான்... பின்ன அதென்ன சார்.. Facebook மட்டும்தான் இளிச்சவாயா..? அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA., TWITTER., YAHOO., APPLE., iPhone., Sim Card இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு சொல்லிட்டு போங்க. ஆங்... மறந்துட்டேனே.. அப்படியே KARATE, Kung-Fu-க்கும் என்னன்னு சொல்லிடுங்க.. ( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும் விதிவிலக்கா என்ன..?!! )
Posted on: Wed, 24 Jul 2013 04:44:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015