From fourth century to sixth century entire TAMIL NADU was ruled - TopicsExpress



          

From fourth century to sixth century entire TAMIL NADU was ruled by KALAPPIRAR . During that time Tamil Nadu was in Dark Time( Irundakalam ).They dont give importance to TAMIL LANGUAGE . Impotance was given to POLI and PIRAKIRUTHAM languages. They spread JAIN & BUDDIST Religion . KOON Pandian & MAHENDRA VERMAN ( Pallava King )even in the seventh century followed JAINISM . More people began to follow JAINISM. Appar ( Thirunavukkasar ) was also converted to Jainism by the Jain Priests and was taken to NALANDA . There he was suffered by severe stumoch Pain . He return back to THIRUVATHIGAI VEERATNAM Lord Shiva Temple and sang a song about Lord Shiva. By Lord Shivas grace his pain was fully cured. But Mahendra Verman tortures Appar By 1 putting him in lime choolay for number of days. 2. led an elephant to kick him 3. Put him on the sea tied him with a big stone slab etc. But Lord Shivas grace saved him from all those dangers. Knowing SIVANADIARS ( Appar ) Greatness Mahendra Verman Immediately converted to SAIVAM. Like that KOON PANDIAN was cured by GNANASAMBANDAR from his FEVER ( Heat ) and removing his back bend . He immediately converted to SAIVAM from JAINISM. Here is APPARS Biography.திருநாவுக்கரசு நாயனார்கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர் ஆவார். இவர், அப்பர், திருநாவுக்கரசர் என்னும் சிறப்புப் பெயர்களாலும் வழங்கப் பெறுகிறார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். தற்போதைய South Arcot மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் புதல்வனகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச்சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார். சமண சமயத்தில் இருந்தபோது திருநாவுக்கரசர் தருமசேனர் என்றழைக்கப்பட்டார் திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். இதனால் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் திலகவதியிடம் முறையிட்டார்.திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார்.திருநாவுக்கரசர் கூற்றாயினவாறு விலக்ககலீர் என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார். இவர் தொண்டு வழியில் இறைவனை வழிபட்டவர். பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டுதூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணப் பிடிப்போடு இருந்த பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பல்விதத்திலும் துன்புறுத்தினான். அத்துன்பங்கள் யாவற்றையும் திருநாவுக்கரசர் தனது இறைவலிமையோடு வென்றார். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே’ என்னும் நமச்சிவாயப் பதிகம் இதனை மெய்ப்பிக்கிறது. இறுதியில் பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவன்ச் சைவ சமயத்திற்கு மாறினான். தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் உயிர் நீத்தார். அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இஙகு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்ற்ப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும். பொருளடக்கம் [மறை] 1 அற்புதங்கள் 2 இசை ஞானம் 3 இவற்றையும் பார்க்கவும் 4 உசாத்துணைகள் 5 வெளி இணைப்புகள் அற்புதங்கள்[தொகு] சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார் சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார் சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது. விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது. இசை ஞானம்[தொகு] திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன. 1.கொல்லி 2.காந்தாரம் 3.பியந்தைக்காந்தாரம் 4.சாதாரி 5.காந்தார பஞ்சமம் 6.பழந்தக்கராகம் 7.பழம் பஞ்சுரம் 8.இந்தளம் 9.சீகாமரம் 10.குறிஞ்சி
Posted on: Sun, 01 Dec 2013 16:05:46 +0000

Recently Viewed Topics




© 2015