Google Play Store இல் இருந்து Android - TopicsExpress



          

Google Play Store இல் இருந்து Android சாதனங்களுக்கு தரவிறக்கும் Games, Application போன்றவற்றினை இனி கணனிக்கும் தரவிறக்கலாம். Real APK Leecher மென்பொருள் இணையத்தில் பல்வேறு சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் சாதனைகளின் அரசன் Google, கையடக்க தொலைபேசிகளிலும் தனது கைவரிசையை காட்டத் தவறவில்லை. Smart Phone என்றாலே எட்டாக்கனியாக இருந்தவர்களும் கூட Android இன் வருகையின் பின் Smart Phone மூலம் புதிய அனுபவத்தை பெற துவங்கியுள்ளனர். இன்று Android இன் மிகையான பாவனையால் அதற்கான Games, Application போன்றவற்றுக்கான கேள்வி அதிகம் எழுந்துள்ளது. எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யவே Google Play எனும் தனி ஒரு களத்தையே அமைத்து Android பாவனையாளர்களுக்கு தனது சேவையை வழங்குகிறது Google. --> இந்த Play Store எனும் Application ஐ ஒவ்வொரு Android Smart Phone இலும் காணலாம். Android பாவனையாளர்கள் தமக்குத் தேவையான Games, Application போன்றவைகளை இதன் மூலமே தரவிறக்கிக் கொள்கின்றனர். என்றாலும் இவைகளை நேரடியாக கையடக்க தொலை பேசிக்கு தரவிறக்கி பயன்படுத்தும் வசதியையே Play Store வழங்குகிறது. இதனால் Mobile Phone நீடித்திருக்கும் நேரம் குறைவதுடன் இன்னும் பல அசெளகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாறான சிரமங்களை தவிர்த்து இவற்றினை நேரடியாக கணனிக்கு தரவிறக்கி பின் கணனியிலிருந்து கையடக்க தொலைபேசிக்கு நிறுவி பயன்படுத்தும் வசதியை APK Leacher மென்பொருள் வழங்குகிறது. வெறும் 3.75 Mb அளவுடைய இந்த மென்பொருளை கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. Real APK Leecher எனும் Application ஐ Double Click செய்து நீங்கள் Play Store க்காக பயன்படுத்தும் E-mail, Password மற்றும் உங்கள் Android சாதனத்தின் Device ID போன்றவற்றினை உள்ளிட்ட பின் உங்களுக்கு தேவையான மென்பொருளினை தேடி தரவிரக்கிகொள்ளலாம். உதவிக் குறிப்புக்கள்: Real APK Leecher மென்பொருளை உங்கள் கணனியில் பயன்படுத்த உங்கள் கணனியில் Java நிறுவப்பட்டிருக்க வேண்டும். Android சாதனத்தின் Device ID யை கண்டறிய *#*#8255#*#* எனும் Code ஐ உள்ளிடுவதன் மூலமோ அல்லது Device ID எனும் இந்த மென்பொருளை உங்கள் Android கையடக்க தொலைபேசியில் நிறுவுவதன் மூலமோ கண்டறியலாம். https://play.google/store/apps/details?id=com.langlearner.deviceid&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5sYW5nbGVhcm5lci5kZXZpY2VpZCJd Real APK Leecher இணை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும். https://real-apk-leecher.googlecode/files/Real%20APK%20Leecher%20v1.3.5.zip பல புதிய சுவையான தொழில்நுட்ப தகவல்களை அறிந்திட எமது facebook Page இல் இணைந்திடுங்கள். நண்பர்களிடமும் share பண்ணுங்க
Posted on: Wed, 28 Aug 2013 06:01:45 +0000

Trending Topics



I can comfortably (and by that I mean without pulling all nighters

Recently Viewed Topics




© 2015