Kannaa Laddu Thinna Aasaiya? ஒரு - TopicsExpress



          

Kannaa Laddu Thinna Aasaiya? ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, "உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, "நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார். அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… "அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது. கடைசியாக மேனேஜர், "நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், "ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"
Posted on: Mon, 29 Jul 2013 09:45:36 +0000

Trending Topics



"sttext" style="margin-left:0px; min-height:30px;"> Is God a Failure? - Eleanor Garrod Now that’s a pretty poignant

Recently Viewed Topics




© 2015