On the day of Uhud, the Messenger of Allah [peace be upon him] - TopicsExpress



          

On the day of Uhud, the Messenger of Allah [peace be upon him] prayed to Almighty O Allah, to You belongs all praise. O Allah, there is no one to take hold of what You let loose and no one to let loose what You take hold of; no guide for those whom You send astray and no one to lead astray whom You guide; no one to give what You withhold and no with-holder of what You give; no one to bring close what You have sent afar, and no one to send afar what You bring near. O Allah, bestow upon us Your blessings, mercy, bounty and provision. O Allah, verily I ask of You the everlasting bliss, which never grow stale nor vanishes. O Allah, I seek Your aid on the day of poverty, and Your security on the day of fear. O Allah, I seek refuge in You from the evil of what You have bestowed on us and what You have not bestowed. O Allah, make faith beloved to us and make it beautiful in our hearts, and make faith beloved to us and make it beautiful in our hearts, and make unbelief hateful to us, as well as sin and disobedience, and make us of the upright. O Allah, make us die as Muslims and resurrect us as Muslims, and admit us among the righteous, neither disgraced nor beguiled. O Allah, fight the unbelievers who deceive Your messengers and deter others from Your way, and send upon them punishment and chastisement. O Allah, fight the unbelievers who have been given the Scripture, O God of truth. உஹது போர் அன்று எதிரிகள் சென்ற பிறகு முஹம்மது [ஸல் ] அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் . அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது; நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை; நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர் வழி காட்டுபவர் யாரும் இல்லை; நீ நேர் வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவர் யாரும் இல்லை; நீ கொடுத்ததை தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை; நீ தூரமாக்கி வைத்ததை நெருக்கமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உன் வளங்கள், உன் கிருபை, உன் கருணை, உன் இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக. அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை பிரியமாக்கி வை. அதை எங்கள் உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உன் கட்டளைக்கு மாறு செய்வது, உனக்கு கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களை பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை; முஸ்லிம்களாக எங்களை வாழச் செய். நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்கு உள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை. அல்லாஹ்வே! உன் தூதர்களை பொய்யாக்கி, உன் வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்து விடு. அவர்கள் மீது உன் தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக. அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்து விடு, உண்மையான இறைவனே.
Posted on: Sun, 03 Nov 2013 16:26:38 +0000

Recently Viewed Topics




© 2015