Thiruppavai - Pasuram 29 sitram siRu kaalE vandhu unnai - TopicsExpress



          

Thiruppavai - Pasuram 29 sitram siRu kaalE vandhu unnai sEviththu un potraamarai adiyE pOtrum poruL kELaay petram mEyththu uNNum kulaththil piRandhu nee kutREval engaLai(k) koLLaamal pOgaadhu itrai(p) paRai koLvaan anRu kaaN gOvindhaa etraikkum Ezh Ezh piRavikkum un thannOdu utrOmE aavOm unakkE naam aatcheyvOm matrai nam kaamangaL maatrElOr embaavaay சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்; மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். Until now, the Gopis through ANDAL were seeking “paRai” from the Lord. Now they elaborate the meaning of that paRai is threefold: (1) Our objective (uddhEsyam) is to perform nithya kaimkaryam at Your holy feet (2) We can not live away form You even for a second (3) Please banish any other thought or desire that might interfere with the fulfilment of the above. Oh Lord GovindhA! May You listen to us (the cowherd girls) (1) who approach You at the very small hours of the day-dawn, and (2) who bow down to You, the purpose and aim of our singing in praise of Your golden, lotus-like pair of feet. You, who took birth in the race of us, the cowherds, earning our livelihood by grazing and rearing the herd of cattle, can not deny us the humble (divine) service (to be rendered unto You). Hearken, Oh Lord! it is not only that we desire to receive the drum (from You) today (lit. in this sojourn of birth), but we desire, in fact, that let us be ever --throughout the births, sevens of generations --the kith and kin of You, let us perform all kinds of Kaimkaryams to You alone; You make us rid of other desires! This stanza clearly tells us of the highest Purushaartha (the end of human life), explaining the meaning of PARAI. Asking for Parai is a pretext; as the cowherds proposed this nonbu for getting rain and as it came in handy for Gopis (Andal) to keep looking at the face of Lord Krishna for as long as they liked, they accepted it. Their real intention is to get KAINKARYA (eternal service)at the lotus-feet of the Lord. The word NARAYANANE used in the first stanza was explained in the previous verse; the word PARAI is explained here. Both Means and End are the same in Sri Vaishnava Sampradaaya;it is Sriman Narayana himself. If those who take Him as the Means have contact with other Means like Karmayoga etc, it is akin to pollution due to contact with a dead body(because Karma Yoga etc are by nature inert and need His Presence to give Result).And if they consider their act of Surrender to the Lord (Prapatti) itself to be the Means, it is like accretion of sin due to contact with a chandaala (because anything which has the taint of the ego pollutes the purity of the Prapanna). Similarly regarding the End also there are two mistakes which need to to be avoided: 1) Desiring other mundane things from Him, which would be like desiring to eat poisoned or contaminated food; and 2) serving the Lord for ones own enjoyment rather than exclusively for His pleasure (Swaartha Kainkarya), which would be like eating food left over from another eater (Uchchishtha Bhojana). Both these types of Purities (UPAAYA SUDDHI and UPEYA SUDDHI) need to be strictly ensured by a Prapanna. The previous verse (28) speaks of UPAAYA SUDDHI -UNTANNAI.... PUNNIYAM YAAM UDEYOM- You ALONE are our Means. The present verse enjoins UPEYA SUDDHI - UNAKKE NAAM AAT SEYVOM - We serve you for the sake of your happiness ALONE, and we derive happiness on seeing your enjoyment. Even the least trace of selfish enjoyment is to be totally erased in the service of God. It is just as in the case of sandal paste, cool breeze, flowers, ornaments, etc which give pleasure to man, without themselves feeling any; the only difference being that man not being inert like them feels happy looking at the pleasure of the Lord. Krishna ordered His servants to bring the huge kettle-drum (PARAI).Then Andal says, O Wonder! You have not understood us. We require only your everlasting, most enjoyable service. We wish to be always born along with you, and keep company with you always to serve you. (Like Lakshmana who served Rama whether He was in Ayodhya or in the forest.).Kindly guard us from evincing interest in anything except you. Just as the body serves a man, the Soul, which is the body of the Lord (Yasya aatma sareeram), should serve Him. This is the natural law. This is the message of Andal in this crowning verse. SIRRAM SIRU KAALE VANTHU: AruNodhaya Kaalam is chosen by Gopis to arrive at Lord KrishNA the time at which the Jn~Anam of the Lord happens (siRRam siRu Kaalam). AzhwAr says : “kaalai nann jn~Anat thuRai padinthAdi”. The dawning of the Jn~Anam about EmperumAn through SadAchArya is SiRRam SiRu Kaalai. SiRRam SiRu Kaalam is the time from Prapathti to the shaking of the mortal coils is the for the Prapannan, when MunivarkaL and Yogis rise gently and start Hari nAma sankIrthanam. Gopis seem to say that it is difficult to see You (KrishNA) once the day has dawned as he goes to the fields to graze the cows. Andal reminds us of the KshaNa Karthavya upAyam of Praaptthi (that which is done in siRiya kaalam) with the invocation of the words, “siRRam sIRu kaalE”. VANTHU UNNAI SEVITTHU: Gopis ask KrishNA to think about the way they came in that cold morning with dew drops on their heads. They remind Him that they have come driven by their fears about their aakinchanyam and ananya gathithvam and have come to worship Him and pray for Kaimkarya Sri. “Sevitthu” refers to the Veda Vaakyam: “BhUyishtAm tE NAMA Ukthim vidhEma”. We have come here with anjali bhaddha hasthams since we know about our mElayArs saying: “Ohr anjaliyum uNDaRukka maattAthu”. You melt like sugar in water, when a Bhakthan stands before You with anjali mudhrA. That indeed is anjali Vaibhavam. Therefore we have come before You at the early dawn with folded hands (sEvitthu). விடியற்காலையில் எல்லோரும் எழுந்து வந்து, உன்னை வணங்கி, உன் திருவடித் தாமரைகளை போற்றி எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம். நீ அதைக் கேட்டருள வேண்டும். மாடு கன்றுகளை மேய்த்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயைக்கொண்டு உண்டு பிழைக்கிறோம். அவ்வாறு வாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், நீ இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது. நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டுவந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றும் இல்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா என்ன? கோவிந்தா! எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே நாங்கள் ஆகவேண்டும். உனக்கே தொண்டு செய்ய வேண்டும். சில சமயம் எங்களுடைய மனம் வேறுவழியில் சென்றால், அவ்வாறு செல்லாமல் தடுத்து, உன் தொண்டிலேயே எங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்! பாசுர விளக்கம்: இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம். இதற்கு அடுத்த பாசுரம் சாற்றுமுறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. இந்த பாசுரம் வரை தன்னை ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளையாக எண்ணிக்கொண்டு ஆண்டாள் பாடினாள். அடுத்த பாசுரத்தில் பெரியாழ்வாரின் பெண்ணாக, திருப்பாவை பாசுரங்களை இயற்றிய கவியாக பலஸ்ருதி சொல்லி முடிக்கிறாள். இந்த பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்லுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான எல்லே இளங்கிளியே! பாசுரத்தில் பாகவத தாஸ்யம் சொல்லப்பட்டது. இந்த இரண்டு பாசுரங்களையுமே பூர்வாசார்யர்கள் ஆச்சர்யப்பட்டு திருப்பாவையாவது இப்பாட்டிறே! என்று புகழ்ந்தார்கள். ரொம்பவும் தத்துவமாகவும், கவித்துவமாகவும் சொல்லி வந்த ஆண்டாள், பகவானை நேரில் பார்த்த பரவசத்தை கடைசி ஐந்து பாசுரங்களில் வெளிப்படுத்துகிறாள். அதிலும் இந்த பாசுரம் முடிந்த முடிவாக தான் விரும்பி வந்தது என்ன என்று உடைத்து சொல்லி அவனுடைய தாஸ்யத்தை தனது பரம புருஷார்த்தமாக கேட்டுக்கொண்ட பாசுரம். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று அபராத க்ஷமாபனம் செய்து தனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை. அதே போல் இந்த பாசுரத்திலும் இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்! என்று நாங்கள் வெறும் பறை எனும் வாத்தியத்தை பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பரம புருஷார்த்தமாக பெற்றுப்போகவே! இதை பூர்வாசார்யர்கள், ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே விஸ்லேஷித்திருக்கை யன்றிக்கே, இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்’ என்று தெரிவிக்கிறார்கள். பரதனைப்போலே உன்னை பிரிந்த போது, அன்னம் தண்ணீர் இல்லாது உன் பாதுகையையே நமஸ்கரித்து அதனடிவாரத்திலேயே இருந்து பக்தி பண்ணிக்கொண்டிருந்தபடி. உன்னோடு இருக்கும்போது, இளைய பெருமாளான லக்ஷ்மணனைப்போல் எல்லாவிதமான தாஸ்யங்களையும் குறைவற்று உனது திருப்திக்காகவே செய்தபடி இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். எற்றைக்கும் என்பது எக்காலத்திலும் என்று ஸ்ரீவைகுண்டத்தில் அருகில் இருந்து செய்யும் தொண்டு. ஏழேழ் பிறவி என்றால், பகவான் பூமிக்கு வந்தாலும் அவனுடனே வந்து இருந்து அவன் கூடவே தொண்டு செய்தல். ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள். இப்படி கேட்பதற்கு இந்த பாசுரத்தின் முன் பாதியில் ஒரு உறுதியை வெளிப்படுத்துகிறாள். சிற்றஞ் சிறுகாலே வந்து… என்று இளம் விடியற்காலையில் வந்து எனும்போது, அவனை தேடி அடி எடுத்து வைத்து வந்ததற்கே அவன் ரக்ஷிக்க சங்கல்பித்து விடுவனாம். பின் ‘உன்னை சேவித்து’ என்று அவனை விழுந்து வணங்கிவிட்டால், அதற்கு என்ன தரக்கூடும் என்று திகைத்துப் போவானாம் பகவான். ‘அதுக்கு மேலே ஓரஞ்சலியையும் உண்டறுக்கமாட்டாத உன்னைச் சேவித்து’ என்று பூர்வாசாரயர்கள் சொல்கிறார்கள். ‘உன் பொற்றாமரை அடியே’ என்று ஏகாரமாக இழுத்து சொல்வதால் வேறொருவரையும் நாடாமல் உன் திருவடிகளையே நாடி வந்து சேவித்து உன்னை போற்றி ஸ்தோத்திரம் செய்து, கவன ஈர்ப்பாக ‘பொருள் கேளாய்!’ என்று நாங்கள் வந்த காரியத்தை கேள் என்கிறாள். பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து என்று சொல்லும் போது, ‘ரக்ஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தாலல்லாது தாங்களுண்ணாத குலம்’ என்று ஆயர் குலத்துக்கு உள்ள லக்ஷணத்தைப்போல் தம்மிடம் ரக்ஷணத்துக்கு வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடாத நீ, குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது! என்று உறுதியாய் சொல்கிறாள். நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள். நாங்கள் உன்னிடம் சூடகம், பாடகம் என்று என்னென்ன கேட்டாலும் கொடுத்தாய். நாங்கள் அதை மட்டுமே பெற்றுப்போக வரவில்லை. அவைகளெல்லாம் இப்போது நாங்கள் கேட்கப்போவதான மோக்ஷத்துக்கு (நீ உகக்கூடிய) சாதனங்கள். எங்களுக்கு உன்னிடம் ஸ்மரணை ஏற்படுத்துவதும், உன்னை வந்தடைவதற்கு ஏற்ற சாதனத்தைக் கொடுப்பதும், செப்பமுடைய உன் திறலால் எங்கள் சாதகத்திற்கு விரோதமாக இருப்பதை நீக்குவதும், மற்றை நம் காமங்கள் மாற்றுவதும், எங்களோடே அந்தர்யாமியாய் இருந்து தேற்றுவதும் உன் அருளாலே கிடைக்க வேண்டும். சாத்யோபாயங்களும், சித்தோபாயங்களும் எல்லாம் உன்னாலேயே கிடைக்க வேண்டும், நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.
Posted on: Tue, 13 Jan 2015 00:28:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015