a_Thenee_head02 Online Newspaper in Tamil - TopicsExpress



          

a_Thenee_head02 Online Newspaper in Tamil Vol.10 13.11.2013 புலிகளின் வதை முகாமில் எனது அனுபவம் - தொடர் – 111 தமிழர்கள் மத்தியில் புலிகள் உருவாக்கிய புதிய இனம்! ltte ChildSoldiersபுலிகளுக்கு ஆட்களைப் பிடித்து வந்து சித்திரவதை செய்வது ஒரு அன்றாடப் பொழுதுபோக்காகவே மாறிவிட்டதை அவதானிக்க முடிந்தது. அதிலும் எமது வதை முகாமில் புலிகளின் விசாரணையாளாகள் என்று இருப்போரில் காந்தியையும், மற்றும் இரண்டொருவரையும் தவிர ஏனையோர் பெரும்பாலும் சராசரியாக இருபது வயதையுடையவர்கள். பொதுவாகவே இந்த வயதுடையவர்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற மனோநிலையுடையவர்களாக இருப்பது இயல்பு. வெளியே என்றால் ஒரு இளைஞன் படிப்பில், விளையாட்டில், தொழிலில், காதலில் என, ஏதாவது ஒன்றில் தனது சாதனையை நிலைநாட்ட முயற்சிப்பான். ஆனால் இவர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் கொடுங்கோலர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும், இன்னொரு வகையில் சாதாரண மனிதர்களுக்குரிய இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் பருவ வயதுக்கு முன்னரே ஏதோ ஒரு சந்தர்ப்த்தில் புலிகளால் பிடித்து வரப்பட்டு, பயமுறுத்தலாலும், மூளைச்சலவை செய்யப்பட்டதனாலும், புலிகளின் பல்லும் சில்லுமாக மாறிவிட்டவர்கள். இவர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகள் மாதிரி ஒரே விடயத்தை மாத்திரம் பார்க்கப் பழக்கப்பட்டவர்கள். இவர்களால் பக்கங்களில் நடப்பவற்றைப் பார்க்கவோ, தாம் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கவோ முடியாதபடி வளர்க்கப்பட்டவர்கள். எனவே, தலைமை என்ன உத்தரவிடுகிறதோ அதைக் கண்ணை மூடிக்கொண்டு செய்வதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. அதிலும் அவர்களது பிடியில் சிக்கியுள்ள நாம் வௌ;வேறு அரசியல் நிலைப்பாடுகள் அல்லது அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனத்தால் தமிழர்கள். இருந்தாலும் புலிகள் எம்மைத் தமிழர்கள் என்று பார்ப்பதைவிட வேறொரு புதிய இனமாகவே பார்த்தார்கள். அந்த இனத்துக்கு அவர்கள் வைத்த பெயர் ‘துரோகிகள்’. இந்தப் புதிய இனம் மரபணு ரீதியாக வரலாற்றில் தோன்றிய ஒரு இனமல்ல. இது அந்தந்தக் காலகட்டத்தில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இனம். தமிழகத்தில் வீரபாண்டிய கட்டப் பொம்மனைக் காட்டிக் கொடுத்தவன் எட்டப்பன் என்றும், ‘தமிழீழத்தில்’ பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன் என்றும், தமிழ் சிறார்களுக்கு சிறு வயதில் தாய்ப்பாலுடன், இந்த துரோகிப்பாலும் வரலாற்று ரீதியாகச் சேர்த்து ஊட்டப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் அது நவீன தமிழ் வரலாற்றில் தமிழகத்தில் திராவிட இயக்கங்களாலும், இலங்கைத் தமிழர் மத்தியில் தமிழரசுக் கட்சியாலும் தொடர்ச்சியாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்தத் ‘துரோகி’ என்ற பதத்தை தமிழகத்திலும், ஈழத் தமிழர் மத்தியிலும் அதிகமாக உச்சரித்து ‘கின்னஸ்’ சாதனை படைத்தவர்கள் இருவர். ஒருவர் கருணாநிதி, மற்றவர் அ.அமிர்தலிங்கம். ஆனால் ‘வாள் எடுத்தவன் வாளால் அழிவான்’ என்ற தமிழ் முதுமொழி போல, பிற்காலத்தில் புலிகள் அமிர்தலிங்கத்தை ‘துரோகி’ என்று தீர்த்துக் கட்டியதும், கருணாநிதியை அவரது சகபாடியாக இருந்த வை.கோபாலசாமியே ‘துரோகி’ என்று முத்திரை குத்தி தூசித்தமும் காலத்தின் கோலம்! இந்த நிலைமையில் புலிகள் எமக்கு ‘துரோகிகள்’ என முத்திரை குத்தியது ஒன்றும் புதினமான விடயமல்ல. அவர்கள் தமது ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப பூசையாக ஆரம்பித்ததே யாழ்.மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை ‘துரோகி’ என்று கூறி தீர்ர்ககட்டியதின் மூலமாகத்தான். அதற்கான அரிச்சுவடியைத் தொடக்கி வைத்தவர் அமிர்தலிங்கம். பின்னர் வளர்த்த கடா மார்பில்; பாய்ந்த கதையாக அவரது கதையை பிரபாகரன் முடித்துவிட்டான். நாம் எத்தனையோ அகராதிகளைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் அகராதி இருப்பது நமக்குத் தெரியும். ‘அவனது அகராதியில் இதற்கு அர்த்தம் இதுதான்’ என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி பேச்சு வழக்கில் கேட்பதிலிருந்தே இந்த அகராதிக்கு உள்ள முக்கியத்துவம் விளங்கும். இதிலும் அரசியல் அகராதி என்ற ஒன்று இருக்கிறது. இந்த அரசியல் அகராதியில் பிரித்தானியாவின் கலைக்களஞ்சியம் (டீசவைiளா நுnஉலஉடழடிநனயை) தனித்தன்மை வாய்ந்ததும், பிரசித்தமானதுமாகும். என்றாலும் ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து’ தமிழனின் சாதனைதான் இதிலும் முதன்மையானது. டார்வின் ‘குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியவன்’ என்ற தனது ஆய்வை முன்வைத்தபோது, ‘அந்த முதல் குரங்கு தமிழ் குரங்குதான்’ என மார்தட்டியனல்லவா எமது வீரத்தமிழன்! எனவே நமது ‘மேதகு தேசியத் தலைவர்’ மாட்சிமை தங்கிய, வீர தீர மார்த்தாண்ட பிரபாகரன் அவர்களும் தனது வரலாற்றுப் பங்களிப்பாக தமிழ் அரசியல் அகராதிக்கு சில பல முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார். அதில் ஒன்று, ‘எதிரிகளைவிட துரோகிகள்தான் ஆபத்தானவர்கள்’ என்ற அவரது அரும்பெரும் கண்டு பிடிப்பு! எதிரியைவிட துரோகிதான் ஆபத்தானவன் என்றால், எம்மைப் போன்ற துரோகிகளின் கதி எப்படி இருக்கும் என்று தனியாக வர்ணிக்கத் தேவையில்லை. எனவே இந்தத் துரோகிகளை வெளுக்க வேண்டிய மாதிரி வெளுத்து, ஸ்திரிக்கை பிடிக்க வேண்டிய மாதிரிப் பிடித்து, அழகு பார்க்க வேண்டிய பணி பிரபாகரனின் தொண்டரடிப் பொடியாழ்வார்களின் தலையாய பணி அல்லவா? பிறகென்ன கரும்பு தின்னக் கைக்கூலியா கொடுக்க வேண்டும்? அவர்கள் யார் எவர் என்று பார்க்காமல் துவைத்துத் தள்ளுவதையே தமது தலையாய வேலையாக்கிக் கொண்டார்கள். அதை அவர்கள் தமது பதின்ம வயது சாதனையாகவும் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். என்றுடன் பிற்காலத்தில் புலிகளின் கோவிலாக்கண்டி திறந்தவெளிச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்த, புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் மல்லி என்பவன் தலைமையில் அவர்களது துணுக்காய் வதை முகாமில் ‘பணி’ புரிந்த வவுனியாவைச் சேர்ந்த ஒருவன், தினசரி புலிகளால் லொறிகளில் ஏற்றி வரப்படும் “துரோகிகளை’ சுடுவதில் யார் கூடுதலான ஆட்களைச் சுடுவது என்பதில் போட்டியே இருந்ததாக ஒருமுறை குறிப்பிட்டான்! இந்த மாதிரி புலிகள் தமது உறுப்பினர்களை சமூகத்திலிருந்து பிரிந்த, முற்றுமுழுதாக பாசிச மயப்படுத்தப்பட்ட நபர்களாகவே மிகவும் கவனமாக வளர்த்தார்கள். சாதாரணமாக ஒரு அரச இராணுவத்தில் இணைபவர்களுக்கு இராணுவப் பயிற்சிதான் பிரதானமாக வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கான இராணுவ ஒழுக்கக் கோர்வை மிகவும் அத்தியாவசியமாகப் பயிற்றப்படும். அவர்கள் விடுமுறைகளில் வீடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுக்கு தமது குடும்பத்துடனும், சமூகத்துடனும் தொடர்புகளைப் பேணக்கூடிய வாய்ப்புகள் உண்டு.LTTE_Child_Soldiers-2 ஆனால் இதையும் மீறி போர் நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரால் பாரதூரமான அத்துமீறல்கள் நடந்துவிடுவதுமுண்டு. ஆனால் சாதாரண காலங்களில் ஒரு இராணுவ வீரன் ஒழுக்கக் கோவைகளை மீறி நடந்து கொண்டால், கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படும் விதிகள் நடைமுறையில் உண்டு. ஆனால் புலிகளின் கதை வேறு. புலிகளின் ஆயுதப் போராளிக்கும் சரி, புலனாய்வுப் பிரிவினருக்கும் சரி வித்தியாசமான பயிற்சிகளே வழங்கப்படுவதுண்டு. முக்கியமாக மனோரீதியான உளவியல் பயிற்சிகளே அவர்களுக்கு வழங்கப்படும். இதில் முக்கியமான பயிற்சி ‘துரோகி’ பற்றியதாகும். அத்துடன் பெற்றோரை, உறவினர்களை, நண்பர்களை, மதிப்புக்குரியவர்களை, அதாவது மொத்தமாக சமூகத்தையே வெறுப்பது பற்றிய பயிற்சி முக்கியமானதாகும். அதாவது அவர்களது பரிபாசையில் இனவிடுதலை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தமது உறுப்பினர்களை ‘பற்றற்ற’ ஒரு ஒருவராக உருவாக்குவதே அவர்களது முக்கியமான வழிமுறையாகும். அதனால்தான் ஒரு சிறுவன் சமூக உணர்வு பெறுவதற்கு முன்னரே, அதாவது அவனது மனதில் ஒன்றுமே எழுதப்படாத வெற்றுக் காகிதமாக இருக்கும்போதே, புலிகள் அவனைக் கடத்திச் சென்றுவிடுகிறார்கள். அந்த வெற்றுத்தாளில் தமக்கு விரும்பும் சித்திரங்களைப் புலிகள் தீட்டிய பின் அவனை அல்லது அவளை ஒரு மிருகமாக மாற்றி கூண்டுகளில் அடைத்து வைக்கிறார்கள். தேவையான பொழுது அதை அவிழ்த்துவிட்டால், அது தனது எஜமான் சுட்டடிக்காட்டும் இலக்கு மீது ஆவேசத்துடன் பாய்ந்து குத்திக் குதறிக் கிழித்து விடும். இதுதான் அந்த மிருகங்களால் குதறப்பட்ட எம்மைப் போன்றவர்களின் நிலை. இதிலும் புலிகள் இன்னும் ஆழமாகப்போய் புதிய வகையிலான முயற்சிகளை ஆரம்பித்திருந்தார்கள். போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை பொறுப்பெடுத்து, அவர்களைப் பராமரிப்பதற்காக ‘செஞ்சோலை சிறுவர் இல்லம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அதன் முகாம்கள் முதலில் சண்டிலிப்பாயிலும், பின்னர் கைதடியிலும், புலிகள் 1995இல் வன்னிக்கு விரட்டப்பட்ட பின்னர் புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்திலும் அமைந்திருந்தன. அதற்குப் பொறுப்பாக ஜனனி என்ற புலிகளின் பயிற்சி பெற்ற யுவதி ஒருவர் இருந்தார். அவரை எனக்குத் தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும். இந்த சின்னஞ்சிறு ‘அநாதை’க் குழந்தைகளை முளையிலிருந்தே தற்கொலைப் போராளிகளாக உருவாக்கும் ஒரு திட்டத்தை புலிகளின் தலைமை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை, புலிகளின் உறுப்பினன் ஒருவன் சொன்னபோது நான் ஆச்சரியப்படவில்லை. அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக அனுதாபப்படுவதைத் தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. நான் ஆச்சரியப்படாததிற்குக் காரணம் இருந்தது. புலிகள் அநாதைக் குழந்தைகளைக் கூட தற்கொலைப் போராளிகளாக்குவார்கள் என்பது இரகசியமானதல்ல. ஏற்கெனவே அவர்களது ஆஸ்தான பாடகன் சாந்தன் என்பவன் பாடி, புலிகள் பிரசித்தமாக அவர்களது நிகழ்ச்சிகளின் போது ஒலிபரப்பும் பிரசித்தமான பாடல் ஒன்றுள்ளது. ‘அதோ அந்த அகதி முகாமில் அநாதைக் குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தை நாளை வந்து எமது அணியில் இணையும்;’ என்ற மாதிரியான பாடல் அது. பெரும்பாலும் அந்தப் பாடலை புலிகளின் ஆஸ்தான கவிஞன் புதுவை இரத்தினதுரை (இந்த பாட்டுப் புலி ஒருகாலத்தில் எமது அணியிலும் இருந்தது என்பதை நினைக்க வெட்கமாக இருக்கிறது) எழுதியிருப்பானோ என்னவோ? புலிகள் என்னதான் சிலர் சொல்வது போல, ‘புறநானூற்று வீர தீரங்களை’ நிகழ்த்தி வந்தாலும், நாம் முன்னரே அடிக்கடி கூறுவது போல, அல்லது எழுதியது போல, அவர்கள் திரும்பிவர முடியாத குகை போன்ற ஒற்றையடிப் பாதையிலேயே பயணித்தார்கள். அதனால்தான் அவர்கள் மாவிலாற்றில் ஆரம்பித்த பயணம், முள்ளிவாய்க்கால் வரையுள்ள சமுத்திரக் கரை வரை சென்று, திரும்பி வராமலேயே முற்றுப் பெற்றது. தமிழர்களுக்கு இது ஒரு சரித்திரப் படிப்பினையாகும். ஆனாலும் என்ன? பிரபாகரன் சில வேளைகளில் அந்த இறுதி யாத்திரையின் போது தப்பிப் பிழைக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால், தனது தவறை மீள் பரிசீலனை செய்திருப்பானோ என்னவோ? ஆனால் இப்பொழுது அவனது வாரிசாகத் தம்மைத் தாமே தம்மட்டம் அடித்துக் கொள்ளும் ஒருபோதும் ஆயுதத்தைத் தூக்காத உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் வயிற்றுப் பிழைப்புவாத ‘சருகு புலிகள்’, அவன் போன அந்த மீட்சியில்லாத ஒற்றையடிப் பாதையில்தான் போவோம் என தொடர்ந்தும் அடம் பிடிப்பதுதான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது
Posted on: Wed, 13 Nov 2013 20:49:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015