அடால்ஃப் ஹிட்லர் - TopicsExpress



          

அடால்ஃப் ஹிட்லர் (1889-1945) இந்த நூலில் வேண்டா வெறுப்புடன்தான் அடால்ஃப் ஹிட்லரைச் சேர்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது. ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார். முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker"s Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார். ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார். 1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார். ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன. எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார். அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது. ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று. 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார். 1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது. ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன...by soundar
Posted on: Mon, 30 Sep 2013 15:24:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015