அன்புள்ளங்களே! அஸ்ஸலாமு - TopicsExpress



          

அன்புள்ளங்களே! அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் அன்பு தழுவிய ரமலான் வாழ்த்துக்கள். குழுமத்தில் உள்ள நம் சகோதரர்கள் அனைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவன் என்ற உரிமையோடு உங்களிடம் என் ஆதரவற்ற சகோதர,சகோதரிகளுக்காக உதவி வேண்டி உங்களிடம் வருகிறேன். ஜகாத் என்பது மார்க்கத்தில் கட்டாய கடமையாக்கப் பட்டிருக்கும் ஒருஅமலாகும்.அதனால் தான் இறைவன் தன் அருள் மறையில் 30 இடங்களுக்கும்மேலாக தொழுகைக்கு அடுத்த படியாக ஜகாத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறான். கட்டாயக் கடமையான ஜகாத்தினை, ஜகாத் பெற தகுதியுள்ளவர்களுக்கு சரியாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜகாத் பற்றிய விழிப்புணர்ச்சியை நம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்7 வருடங்களுக்கு முன்பு இணைய தளம் மூலமாக எனது தாவாப் பணியினைத் துவக்கி அல்ஹம்துலில்லாஹ் அதில் ஒரளவு வெற்றியும் பெற்று விட்டேன். உற்ற நண்பர்கள்,சகோதரர்கள் சிலரின் மூலம் கிடைக்கும் ஜகாத் தொகையினை உரியவர்களுக்கு பங்கீட்டு வருகிறேன். இதில்எந்த விதமான தவறும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே தனி ஒரு மனிதனாகஇதை செய்து வருகிறேன். ஜகாத்தினை வசூலிக்க முற்றிலும் தகுதி வாய்ந்தவன் என்ற முழு நம்பிக்கையோடு தொடர்ந்து இப்பணியினை செய்து வருகிறேன். ஆகவே அன்பு சகோதரர்களே! தங்களின் ஜகாத் பணத்தில் ஒரு பகுதியையாவது, என் மேல் முழு நம்பிக்கையிருந்தால் மட்டுமே கொடுத்து உதவி இந்த எனது புனித பணியினில் நீங்களும் பங்கெடுக்க உங்களை அன்போடு வேண்டுகிறேன். சென்னை புதுபேட்டையில் என்னை சுற்றிஏறத்தாழ 22 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கும் கீழாக, எவ்விதவாழ்வாதாரமுமின்றி கஷ்ட நிலையில், ஆண் துணையின்றி, உங்களின் மேலானஉதவியினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். இக்குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் பொருளாதார உதவியினை மற்றவர்களிடம் சென்று பெறக் கூட வெளியில் வர அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு தேடிப் போய் உதவிகளை என்னால் முடிந்தளவு செய்து வருகிறேன். பள்ளிவாசல்,மதரஸா கட்டுவதற்காக உங்களின் ஜகாத்தினை அளிப்பதை விட , நம்அண்டை வீட்டாரின் பசியை போக்குவதே சிறந்ததாகும்.இது இறைவனுக்கேஉணவளித்த பயனை அடைவது போலாகும். இந்த வருடமும் பலர் உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். 1.குலசை, உடன்குடி,சென்னையில் புதுப்பேட்டையைச் சேர்ந்த 23 உயர் நிலைப் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு(தனியார் பள்ளியில் பயிலும்) ஒரு வருட பள்ளிக் கட்டணம்,யூனிஃபார்ம்,போன்ற தேவைகளுக்காக ஒரு ஆளுக்கு ரூ,2200-ரூ2400 தேவை படுகிறது. 2. தூத்துக் குடி மாவட்டத்தைச் சார்ந்த 6 கல்லூரி மாணவியர் தங்களுடைய கல்லூரி வருட கட்டணமாக தலா ரூ5000--ரூ 6000 கட்ட வசதியின்றி நம்மிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். 3. மேற்குறிப்பிட்ட 22 ஆதரவற்ற குடும்பங்களுக்கும் ரமலான் மாத செலவுகளுக்கும், ரமலான் பெருநாளை நம்மோடு சேர்ந்து கொண்டாடவும், புத்தாடைகளுக்கான செலவும் சேர்த்து ஒரு குடும்பத்திற்கு ரூ 5000 தேவைப் படுகிறது. இவர்கள் அனைவருமே நன்கு பரிசீலிக்கப் பட்டு தேர்வு செய்யப் பட்டவர்கள்.உங்களின் மேலான உதவியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். ஸதக்கத்துல் ஜாரியா எனும் நிரந்தர நன்மையினை அடைய இவர்களின் கல்விக்காக முடிந்த உதவியினைச் செய்ய வேண்டுகிறேன். இன்னும் மேலே குறிப்பிட்ட ஆதரவற்ற குடும்பங்கள் அவர்களின் அன்றாட தேவைகளுக்காக உங்களின் உதவியை நாடி காத்திருக்கிறார்கள்.. உங்களின் ஜகாத் தொகையினில் ஒரு பகுதியை இவர்களுக்காக வழங்குங்கள் என அன்புடன் உங்களிடம் வேண்டுகிறேன். இவர்களில் யாருக்கு உங்களின் ஜகாத் தொகை சேர விரும்புகிறீர்களோ அதை குறிப்பிட்டு அனுப்பினால் அவரவர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.நீங்கள் தருவதை உரிய முறையில் உரியவர்களிடம் சேர்ப்பது எனது கடமை. அதனை நியாயமான,நேர்மையான முறையில் செய்வேன்(இன்ஷா அல்லாஹ்) என இறைவன் மேல் ஆணையாக உறுதி கூறுகிறேன். ஜகாத் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டு எனக்கு தகவல் தெரிவிக்கவும். சிறு தொகையாக இருப்பினும் சரியே. அல்லது குழுமத்தில் ஒருவர் மற்றவர்களிடம் வசூலித்தும் மொத்தமாக அனுப்பலாம். எனது நோக்கம், ஜகாத் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஜகாத் பெறத்தகுதியுடையவர்களுக்கு மட்டும் அவை சேர வேண்டும் என்பதே... அறக்கட்டளையை பதிவு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. அதுவரை கீழ்கண்ட எனது தனிப்பட்ட வங்கி கணக்குக்கு அனுப்பவும். வங்கி விபரம்: H.Mehar sultan A/C.no;SB 414362020 Indian Bank Athiththanar Salai Branch IFS Code:IDIB000A090 Chennai-2 தங்கள் சகோதரன், Engr.Sulthan
Posted on: Wed, 24 Jul 2013 08:02:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015