இதோ ஒரு கணம் - TopicsExpress



          

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ? l 1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம் 2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு 3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம் 4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு 5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி 6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள் 7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு 8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம். 9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல் 10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக் 11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை 12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல் 13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை 14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில் 15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை. 16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம் 17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத் 18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி 19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து 20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல். 21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு 22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள்,ராவு காலம். 23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை 24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு 25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும். 26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு. 27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு. 28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா,கத்தம். 29. அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள், 30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல். 31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம். 32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது,யானை ஊர்வலம். 33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம். ஒரு நறுக்கு -அல்- பாகவி
Posted on: Sat, 31 Aug 2013 06:15:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015