இரண்டரை வயது - TopicsExpress



          

இரண்டரை வயது குழந்தையும், Tension ம் ! என் அண்ணன் (பெரியப்பா மகன்) மகளுக்கு வயது இரண்டரை. Playschool சென்று வருகிறாள். எல்லோரிடமும் கலகலப்பாக பேசக் கூடியவள், என்னைத் தவிர.. நான் அவர்கள் வீட்டினுள் சென்றால் நான் வெளியேறும் வரை எதுவும் பேச மாட்டாள். காரணம், நான் எந்த குழந்தையையும் பார்வையால் மிரட்டி, கலாட்டா செய்யக் கூடியவன். ஆக, அவள் எனக்கு வைத்திருக்கும் பெயர் பூச்சாண்டி சித்தப்பா :) இன்று அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு முடிவெடுத்து, இன்று அவளுக்கும் எனக்குமான பகையை (?) மறந்து Friend request கொடுத்து, Friend ஆகி விடுவதென்று முடிவெடுத்து மெதுவாகப் பேச்சு கொடுத்து, கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராடி அவள் என்னிடம் பேசத் தொடங்கினாள். சிறிது நேரம் கழித்து, பேச்சு வளர்ந்து கொண்டே செல்லும்போது நிகழ்ந்த உரையாடல் சிப்பாச்சி (சித்தப்பாவின் another version :) ), எங்க ஸ்கூல்ல அங்க மிஸ் கூட எடுத்த போட்டோ இருக்கு அப்போ நாம போய் அதை எடுத்துட்டு வந்து வீட்டுல மாட்டிரலாம் பாப்பா உங்களை உள்ள விட மாட்டாங்க சிப்பாச்சி ஏன் நீங்க பெரிசா இருக்கீங்க ; குட்டியா இருந்தாத்தான் உள்ள விடுவாங்க அப்போ உங்க மிஸ் பெருசாத்தானே இருக்காங்க ; அவங்களை எப்படி உள்ள விட்டாங்க ? சொல்லு பாப்பா, உங்க மிஸ்ஸை எப்படி உள்ளே விட்டாங்க? 10 வினாடிகள் கழித்து வந்த அவளின் பதில் நீங்க என்னை Tension பண்ணுறீங்க சிப்பாச்சி :) சுற்றி இருந்த அண்ணன், அண்ணி, பெரியப்பா, பெரியம்மா, என் அப்பா அம்மா உட்பட அனைவரும் சிரிப்பை வெடியாக்கத் தொடங்கிவிட்டனர் :) ஆனால், எனக்கு இன்னமும் புரியாதது ஒரு இரண்டரை வயது குழந்தைக்கு Tension என்கிற வார்த்தையும், அதை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று புரிந்திருப்பது எப்படி ?
Posted on: Sun, 03 Nov 2013 18:00:31 +0000

Trending Topics




[08:59, 31/07/2014] Quabhena Emmamens: Italian Serie A side Napoli

Recently Viewed Topics




© 2015