இறந்தவனின் உடலை - TopicsExpress



          

இறந்தவனின் உடலை வைத்தும் அவன் செஞ்ச காரியத்தை வைத்தும் பிழைக்கும் அரசியல்வாதிகள் எப்படியிருப்பார்கள்? போனது போகட்டும் இன்னோர் ஜோடி கிடைக்காமலா போய்விடும், அப்புறம் அவர்கள் வாழ்க்கையிலும் விளையாடி புரச்சி செய்துவிட்டால் போகிறது. அப்புறம் தினம் காத்தாலே எந்திரிச்சு புரச்சி செய்யாட்டி புரச்சி என்னாகிறது? //இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கையில், போஸ்ட் மார்ட்டத்தில் எந்த தவறும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கவில்லை. மனுதாரரின் நோக்கம், நியாயமற்ற நோக்கம் என்று நாங்கள் கருதவில்லை. ஏழை விளிம்பு நிலை மக்களின் நீதிக்கான கோரிக்கை இது. இப்படிப்பட்ட நீதிக்கான அழுகுரல் வீணாகாமல் நிவாரணம் வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை” அப்படின்னு தீர்ப்புல நீதிபதி தனபாலனும், நீதிபதி சி.டி.செல்வமும் சொல்லிட்டு, எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்கணும்னு உத்தரவு போட்டாங்க. ஒரு சந்தேக மரணத்திற்கு மறு பிரேதப் பரிசோதனை கேட்பதில், ஏழை விளிம்புநிலை மக்களின் நீதிக்கான அழுகுரல் கேட்கிறதுன்னு தீர்ப்பு எழுதற நீதிபதிகளில் ஒருவர் திமுகவோடு தீவிர அனுதாபி. அழகிரியோடு அயோக்கியத்தனமான மகனுக்கு முன்ஜாமீன் கொடுத்தவரு. மற்றொரு ஏழை விளிம்புநிலை நீதிபதி, தன் ஏழை விளிம்புநிலை மகளுக்கு பல கோடி ரூபாய் செலவுல, எம்ஆர்சி கல்யாண மண்டபத்துலயும், ஹோட்டல் லீலாபேலஸ்லயும் திருமணமும் வரவேற்பும் நடத்துனவரு. இதுல வேடிக்கை என்னன்னா, இதே நீதிமன்றம்தான் எய்ம்ஸ் மருத்துவர்கள், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பாக கொடுத்த அறிக்கையை ஏத்துக்க மறுத்துச்சு. தலித் அரசியல்வாதிகள்தான் இந்த விஷயத்தில் அரசியல் நடத்துறாங்கன்னா, நீதிபதிகளும், தங்கள் மேலும் புகழின் வெளிச்சம் படணும்னு கூத்தடிச்சிக்கிட்டு இருக்காங்க” ”தலித் அரசியல்வாதிகள் என்ன கூத்து பண்றாங்கன்ற… ? ” என்று வினவினான் ரத்னவேல். ”இளவரன் இறந்ததும்…. “இளவரசா… இறந்து விட்டாயே…. உன்னை பறிகொடுத்து விட்டோமேன்னு கண்ணீர் வடிக்கிறாங்க… ஒவ்வொரு நாளும், இது தற்கொலை அல்ல… கொலைதான்னு புதுசு புதுசா தியரி கண்டுபிடிக்கிறாங்க. இளவரசன் படத்தை ஃபேஸ்புக்ல போட்டுக்கறாங்க. இது கொலை, கொன்னது பாமக தான்னு வீராவேசமா பேசறாங்க, எழுதறாங்க. ஆனா, இளவரசன் சென்னையில் ரெசிடென்சி ஹோட்டல்ல தங்கியிருந்தப்போவே தன் கையை கத்தியால கிழிச்சிக்கிட்டானாம். அப்போ ஹோட்டல்ல இருந்த ரூம் பாயை சனிக்கிழமை இரவு சாட்சி சொல்றதுக்காக காவல்துறையினர் கூட்டிட்டுப் போயிருக்காங்க. கையை கிழிச்சிக்கிற மனநிலையில இருக்கற ஒரு பையனை தனியா விடலாமா ? அவனுக்கு மனவியல் மருத்துவர்களின் ஆலோசனை வேண்டாமா… குறைந்தபட்சம் அவனை பாதுகாப்பா சென்னையில தங்க வச்சுருக்க வேணாமா… இதுக்கெல்லாம் எந்த உதவியும் செய்யாதவங்கதான் இன்னைக்கு, இளவரசனோட மரணத்தை வச்சு அரசியல் பண்றாங்க… தங்களை போராளிகளா காமிச்சுக்கணும்னு நினைக்கிறாங்க.. இளவரசனோட மரணத்துக்குப் பிறகும், யார் அரசியல் ஆதாயம் தேட்றதுன்னு, பிஎஸ்பியோட வழக்கறிஞர் ரஜினிகாந்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் போட்டி. இந்தப் போட்டியில, இளவரசனாட குடும்பத்தையும் இழுத்து அலைக்கழிச்சு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உண்டி பண்ணிட்டாங்க. காவல்துறை வேறு வழியே இல்லாமத்தான், இளவரசனையும், அவர் உறவினர்களையும் 144 தடை உத்தரவை மீறியதா கைது பண்ணிட்டாங்க. நீதிமன்றம் ஜாமீன் குடுத்தாலும், ஞாயித்துக்கிழமை இறுதிச்சடங்கு நடந்தா, வழக்கறிஞர் ரஜினிகாந்தாலா கலந்துக்க முடியாது. திருமாவளவனாலும் கலந்துக்க முடியாது. திருமாவளவனுக்கு கலெக்டர் அனுமதி மறுத்துட்டார். ரஜினிகாந்தோட ஜாமீன் உத்தரவுல எழுத்துப் பிழை காரணமா, புதிய உத்தரவு வேணும்னு சிறையில சொல்லிட்டாங்க. ”// savukku.net/index.php?option=com_content&view=article&id=1854%3A--12&catid=1%3A2010-07-12-16-58-06&Itemid=19 // “Ilavarasan slashed his left wrist with a sharp metal in a bid to commit suicide in a lodge at T. Nagar in Chennai. His mother rushed to his rescue and arranged first aid. We have recorded the statements of those who counselled the youth against resorting to such extreme step … the hotel staff have also given evidence about blood stains in the room,” the official said speaking on conditions of anonymity. Claiming to have obtained a photograph in which Ilavarasan is seen with a bandage on his left wrist, he said some of his friends had told police that he was in a depressed state of mind after Divya got separated. “A day after his wife told the media in Chennai that she would not unite with Ilavarasan again, he was found dead in Dharmapuri. Some eyewitnesses have claimed to have seen him in a liquor shop a couple of hours before his death.” // thehindu/news/national/tamil-nadu/forensic-report-validates-handwriting-of-ilavarasan-in-suicide-note/article4912613.ece?homepage=true
Posted on: Sun, 14 Jul 2013 05:09:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015