என்ன சார் மேட்ச் - TopicsExpress



          

என்ன சார் மேட்ச் பார்த்தேளா.. அடிக்கடி என்னை கடையில் சந்திப்பவர்.. இல்ல சார் பார்க்கலை பார்க்கலையா.. லாஸ்ட் டே கூடவா பார்க்கலை.. சச்சின் டென்டுல்கர் லாஸ்ட் மேட்ச் சார் சார்.. அந்த சானல் எனக்கு வராது.. அதுவும் இல்லாம டெஸ்ட் மேட்ச் .. வொர்கிங் டே லெ பார்க்க டயம் இருக்காது.. அதான் விட்டாச்சு என்ன சார் .. ரிட்டையர் ஆனார்.. என்ன டச்சிங்கா இருந்தது தெரியுமா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க.. நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாமே சார்.. சனிக்கிழமை தானே.. ம்ம்ம்.. அடிக்கடி ந்யூஸ்லே காமிப்பாங்க.. இல்லேன்னா இருக்கவே இருக்கு யூ டியூப்.. அதெல்லாம் எப்படி சார்.. god of cricket ரிட்டையர் ஆனார்.. என்ன மேட்ச் இந்தியா ஜெயித்திருக்கு வேற.. நீங்க பார்க்கலங்கறீங்க.. அதுவும் சனிக்கிழமை அவரை சீண்ட வேண்டும் என எனக்குள் ஒரு பிரவாகம் ஓடியது எல்லாம் சரி,, god of cricket ங்கறதை நான் ஒத்துக்க மாட்டேன் என்ன சொல்றீங்க.. உலகமே கொண்டாடறது.. நீங்க இல்லேங்கறீங்க விபரமா சொல்றேன்.. home of cricket எது.. ஐ மீன் mecca of cricket அப்படினு சொல்ற இடம் எது லார்ட்ஸ் கிரிகெட் க்ரௌன்ட்.. அந்த மைதானத்துல உங்க god of cricket செஞ்சுரியே அடிச்சது இல்லை தெரியுமா சார் தெரியாம சொல்லாதீங்க அடிச்சிருப்பார்.. இல்ல சார் அந்த மைதானத்துல டெஸ்ட் மேட்ச்சிலே இன்டியாலேர்ந்து வினு மன்கட் ஒருதரம், வெங்க்சர்க்கார் மூனு தரம், விஸ்வநாத் ஒரு தபா, ரவி சாஸ்த்திரி ஒரு தடவை, அசாருதீன் ஒரு டைம், சௌரவ் கங்குலி ஒரு டைம், அஜித் அகர்க்கர்னு ஒரு பையன் இருந்தானே அவன் ஒரு தரம்.. இவங்க தான் செஞ்சுரி அடிச்சிருக்காங்க கவாஸ்கர் கூட இல்லையா இல்ல சச்சின் one day match ல அடிக்கலையா லார்ட்ஸ் க்ரௌண்ட்லே ஒன் டே மேட்ச்ல இன்டியன்ஸ் யாரும் செஞ்சுரியே அடிச்சது இல்லை கொஞ்ச நேரம் சும்மா இருந்தார் ஹோம் ஆஃப் கிரிகெட் என்கிறதான லார்ட்ஸ் க்ரௌன்ட்ல செஞ்சுரி அடிக்காததாலே god of cricket இல்லை.. இது ஒரு பெரிய விவாதமா போய்ட்டிருக்கு நீங்க கவனிக்கலையா கடைக்காரர் சிரித்துக் கொண்டே சொன்னார், என்ன சார் அவர் 500 ரூபா கொடுத்தார்.. ஒரு பாக்கெட் சிகரெட்,, ஆனந்த விகடன் ,, வாங்கிட்டு மிச்ச சில்லறை வாங்காம தலையைத் தொங்கப் போட்டுட்டு போய்ட்டார் பாருங்க எங்க போறார் நாளைக்குப் பார்க்கும் போது கொடுத்திருங்க
Posted on: Sun, 17 Nov 2013 11:05:44 +0000

Trending Topics



lass="sttext" style="margin-left:0px; min-height:30px;"> Once an old man spread rumours that his neighbour was a thief. As
IKADA (IKATAN ALUMNI 232) 2007 PROUDLY PRESENT "BUKA BERSAMA &
Whenever I see a news article on here, I see various comments in

Recently Viewed Topics




© 2015