எப்படித் தமிழ் மொழி - TopicsExpress



          

எப்படித் தமிழ் மொழி பேண… ஓகஸ்ட் 20, 2013 — yarlpavanan முகநூலில் ஓர் அழகான படம் பார்த்தேன். “அவனவன் பிள்ளையும் அயல்மொழி தழுவினால் ஆண்டவன் வந்தா தமிழ் மொழி பயிலுவான்?” என்றொரு பெரிய கேள்விக் குண்டு அப்படத்தில் வெடிக்கிறது. அதன் சிதறல்கள் எத்தனை நம்மாள்களின் உள்ளத்தைத் தைக்குமோ? அதுவும் அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். நம்மாளுகள் தம்பிள்ளைகளை ஆங்கில மொழி உலகப் பள்ளிகளில் (international School – English Medium) இணைப்பதனால், “தமிழ் பள்ளி ஆசிரியர்கள் இலையான், கொசு கலைக்கவோ ஆடு, மாடு மேய்க்கவோ தமிழ் பள்ளிகளில் பணியாற்ற வேண்டும்” என்ற பின்விளைவைத் தட்டிக்கேட்கும் படமாகவே நான் அதனைக் கருதுகிறேன். உண்மையில் ஆங்கில மொழி தேவை தான்; அதற்காக அம்மா, அப்பா சொல்லவே துன்பப்படும் குழந்தைகளை ஆங்கில மொழிப் பள்ளிகளில் இணைப்பதால் தமிழை மறந்த குழந்தையாகவே வளரமுடியும். வெளிநாடுகளில் துணைமொழியை முதன்மை மொழியாகக் கருதிப் பிள்ளைகளைப் படிப்பிக்கிறார்களா என்றால் இல்லையே! இந்தியாவில் பாரதிக்கு முப்பத்திரண்டு மொழிகளும் ஈழத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு பதினெட்டு மொழிகளும் தெரியுமாம். அவர்கள் தமிழைத் தாய் மொழியாகவும் முதன்மை மொழியாகவும் கற்றுக்கொண்ட வேளையிலே மற்றைய மொழிகளைப் படிக்க வில்லையா? நம்மாளுகள் தம்பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளில் இணைத்து தமிழ் மொழி மூலக் கல்வியைத் தொடர வைக்கலாமே! தமிழ் பள்ளியில் தமிழ் மொழி மூலக் கல்வியைத் தொடரும் தமிழ்நாட்டு மாணவி ஒருவள் பன்னிரண்டு பிற மொழிகளில் திறமை பெற்று விளங்குவதாகப் பத்திரிகையில் படித்தேன். அப்படியாயின் நம்ம பிள்ளைகளால் ஏன் முடியாது? படத்தைப் பாருங்கள்… உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்துங்கள்! stoptamilschoolsfromfb உந்தப் படம் உப்படி என்றால்; இந்தப் படம் எப்படியிருக்கு? பார்த்தால் சிரிப்பு வருகிறதா? தமிழ் பேச வேண்டிய நாம், கலப்பு மொழி பேசி நாள் தோறும் தமிழைக் கொல்லும் நம்மவர் செயலைச் சுட்டி காட்டுகிறதே! pannutamilfromfb இப்படத்தில் “எளிய தமிழ் இருக்க பண்ணு தமிழ் எதற்கு?” என்றொரு குண்டைப் போட்டுடைத்திருக்கிறார்கள். பார்த்தால் புரியும்… பேச்சிலும் ஊடகங்களிலும் இப்படித் தான் பண்ணுகிறார்கள்… இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டுவதை விடை அறிஞர் காசிஆனந்தன் சுட்டிக்காட்டினால் எப்படி இருக்குமென்று எண்ணிப் பாருங்கள்… சரி, அவர் எழுதிய “தமிழனா? தமிங்கிலனா?” என்ற நூலைப் படித்துப் பாருங்களேன். “தமிழனா? தமிங்கிலனா?” என்ற நூலைப் பெற எனது மின்நூல் களஞ்சியத்திற்குச் செல்க. பின் பதிவிறக்கிப் படியுங்கள். தூய தமிழ் பேணுவதென்பது எழுத்தாலோ பேச்சாலோ அல்ல, நம்மவர் செயலாலே என்பதை எல்லோரும் மறந்துவிடக்கூடாது.
Posted on: Sun, 25 Aug 2013 09:15:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015