ஒலிம்பிக் களத்தில் - TopicsExpress



          

ஒலிம்பிக் களத்தில் வரலாறு படைக்கும் முஸ்லிம் பெண்கள்! லண்டன் ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்குத் தாங்கள் அதில் முதலிடங்களுக்குள் வரவேண்டுமென்பது முதல் போராட்டமாக இருக்கும். ஆனால் சவுதி அரேபியாவின் Wojdan Shaherkani மற்றும் ஆப்கானிஸ்தானின் Tahmina Kohistani ஆகியோருக்கு ஒலிம்பிக்கில் பங்குபெறுவதே தங்கப் பதக்கம் பெற்றதுபோன்ற வெற்றியைத் தந்துள்ளது. இதனை அடைய அவர்கள் அரசியல், சமூக, மத மற்றும் விளையாட்டுத் தடைகளைக் கடந்துவர வேண்டியிருந்தது. முக்கியமாக சவுதி அரேபியா, கட்டார் மற்றும் புரூணை ஆகிய நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக்கிற்குப் பெண்களை அனுப்பியுள்ளன. சவுதியிலிருந்து Wojdan Shaherkani (16) என்பவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சாரா அத்தர் (20) என்பவரும் வந்திருந்தனர். கட்டாரிலிருந்து வந்த Noor Hussain Al-Malki (17) தான் முதலாவது பெண் விளையாட்டு வீராங்கனையாக இருந்தார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 23 வயதான Tahmina Kohistani உம் முதன்முதலாகவே ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்றார். இவர்களைவிடவும் ஓமானின் Shinoona Salah al-Habsi (19) மற்றும் யேமனின் Fatima Sulaiman Dahman (19) ஆகியோரும் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் பல தடைகளைத் தாண்டிவந்த பெண் முஸ்லிம் போட்டியாளர்களெனலாம். ஜுடோப் போட்டியில் சவுதி வீராங்கனையான Wojdan Shaherkani பியூட்டோ றிக்கோவின் இணையுடன் ஒரு நிமிட நேரமே நீடித்திருந்தாலும் அது சவுதி அரேபியப் பெண்களுக்கான புரட்சிகரமான கணமெனக் கூறலாம். இவர் தவிர ஆப்கானிஸ்தானின் Kohistani 100மீ. ஓட்டத்தில் 14.42 விநாடிகளில் கடைசியாக வந்திருந்தாலும் அவரது வரலாற்றுப் பங்களிப்பின் சாதனையாகவே லண்டன் மக்கள் அவருக்கு உற்சாகமூட்டினரெனலாம். இவர் இதற்காகப் பெண்கள் விளையாட்டுக்களை விளையாடக்கூடாதென்று நம்பும் ஆண்களால் பல மாதங்கள் தொந்தரவு கொடுக்கப்பட்டிருந்தார். இவர்களைவிடவும் கட்டாரின் Noor Hussain Al-Malki என்பவர் ஒலிம்பிக்கில் நுழையும் 4வது நபராக உள்ளார். இவரும் 100மீ. ஓட்டத்தில் சில டசின் அடிகளே வைத்தநிலையில் காயமடைந்து வெளியேறியிருந்தார். இவர் இதில் முற்றுப்பெறவில்லையென்ற நிலையில் பதியப்பட்டாலும் இந்தச் சில அடிகளே அவர்களுக்கான முக்கிய அடிகளாக இருந்ததெனலாம். ஓமானின் Shinoona Salah Al-Habsi உம் யேமனின் Sulaiman Fatima Dahman ஆகியோரும் தங்கத்தினைப் பெறவில்லையெனினும் தடங்களில் பல நிறங்களாலான தலைத்துண்டுகளுடன் ஓடியபோது அவர்களின் முன்னேற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. சவுதியின் 16 வயதான Shaherkani பெண்கள் வாகனம் ஓடுதல் தடையுள்ள, வீடுகளிலிருந்து ஆண் துணையின்றி வெளியேறக்கூடாதென்ற நிலையுடைய சவுதியிலிருந்து வந்தவராவார். இவர் அந்நாட்டின் மதகுருவினால் இதில் பங்குபற்றத் தடைவிதிக்கப்பட்டிருந்தார். இவரை “ஒலிம்பிக்கின் விபச்சாரியென்றும்” குறிப்பிட்டார். இவரது குடும்பம் இனத்தூற்றல்களை எதிர்கொண்டது. அத்துடன் பலர் Shaherkani ஐத் தமது நாட்டினைப் பிரதிபலிப்பவர் இல்லையென்றும் கூறிவந்தனர். இதைவிடவும் இவரது சந்தர்ப்பத்தினை இல்லாதொழிக்கவும் பலர் அச்சுறுத்தினர். இதுமட்டுமல்லாது தலைத்துண்டுகளை அணிந்தால் மட்டுமே அவர் ஒலிம்பிக்கில் பங்குபெறலாமென அந்நாட்டின் ஒலிம்பிக் குழு கூறியது. ஆனால் இவரது துண்டினால் அவருக்கு ஜுடோவில் பாதிப்பு ஏற்படலாமென ஒலிம்பிக்கின் ஜுடோ அணி கவலைப்பட்டது. இதைவிடவும் நீலப்பட்டியையே பெற்றிருந்தார் Shaherkani. தனது எதிராளி மெலிசா மொஜிக்காவிற்கு இரு பட்டிகள் குறைவாகவும் இருந்தார். இன்னொரு விளையாட்டில் ஆப்கானிஸ்தானின் Kohistani 100மீ. ஓட்டத்தில் பங்குபற்றினார். இதில் ஆப்கானிஸ்தானைவிடவும் சிறிய நாடுகளாயினும் அதனைவிடவும் விளையாட்டுக்களில் பல ஆண்டுகள் முன்னேற்றகரமாக உள்ள பப்புவா நியூகினி, Vanuatu, Micronesia, Cape Verde மற்றும் San Marino ஆகியவற்றின் போட்டியாளர்களுடன் நின்றிருந்தார். இவர் ஓடியபோது கிடைத்த ஆரவாரம் அவர் காபூலில் விளையாடியபோது கேலியாக ஆண்களால் கிடைத்த விசில்களைவிடவும் வித்தியாசமாக இருந்தது. தான் காபூலில் பயிற்சிபெறச் செல்லும்போது ஒரு சாரதி தன்னை எங்கு செல்வதாகக் கேட்டபோது தான் ஒலிம்பிக்கிற்காகப் பயிற்சிபெறச் செல்வதாகக் கூறியதாகவும் அவர் உடனேயே தன்னை இறக்கிவிட்டுவிட்டு தன்னை அங்கே கொண்டுசெல்லத்தான் விரும்பவில்லையெனப் பேசியதாகவும் குறிப்பிட்டார். இதைவிடவும் தான் பயிற்சிபெறுகையில் தன்னைப் பலர் குழப்ப விரும்பியதாகவும் கூறினார். எனினும் தான் தமது நாட்டுப் பெண்களுக்குக் கூறும் ஒரேயொரு செய்தியாக அடுத்த ஒலிம்பிக்கிற்குத் தயாராகுமாறும் இன்னும் அதிக பெண்கள் வரவேண்டுமென்று விரும்புவதாகவும் கூறினார்.
Posted on: Fri, 28 Jun 2013 11:27:11 +0000

Recently Viewed Topics




© 2015