ஒழுக்கம் என்பது இறைவனை - TopicsExpress



          

ஒழுக்கம் என்பது இறைவனை பூஜை செய்யும்போது அவசியமானது. பூஜையறையையும், பூஜைப் பொருட்களையும், அவற்றை வைத்திருக்கும் பாத்திரங்களையும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடி அசைவ உணவு உண்ணாமலும், குளித்து விட்டு தூய உடையோடும் பூஜித்தால் அதிர்ஷ்டங்கள் அணிவகுக்கும். பிடித்த தெய்வத் திருநாமங்களை வாய்விட்டு உரக்கச் சொல்லுங்கள். சந்தனம், குங்குமம், புஷ்பம் என்று தெய்வத் திருவுருவங்களை அலங்கரித்து பழங்கள், தேங்காய், பணியாரங்களை படைத்து முடித்து, கோபியர் கொஞ்சும் ரமணா கோபாலா! வள்ளிமலை மன்னவா வேலவா! அனைத்தின் உட்பொருள் தந்தை தாய் நீயல்லவா! அசுரகுலம் அழித்தவரே ஏழைக்கு அபயகரம் நீட்டு -என்று பலர் பாடியுள்ள வரிகளை பக்தியோடு சொல்லி வேண்டுங்கள். எது முதலில் எது பின்னர் என்பது வேண்டாம். அனைத்துப் படங்களிலும், விக்ரகங்களிலும் உள்ள அனைத்துமே ஒரே சக்தி படைத்தவைதான். இப்படி உருகி பக்தி செய்தாலே சிக்கல்கள் நீங்கி சிறப்பாக வாழலாம்.
Posted on: Sun, 23 Jun 2013 16:42:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015