கொத்தவரங்காய்யின் - TopicsExpress



          

கொத்தவரங்காய்யின் உடல்நல நன்மைகள்:- கொத்தவரங்காய்யில் புரதங்கள், நார்ச்சத்து உணவு, இன்னும் கூடுதலாக, அதாவது பல அத்தியாவசிய வைட்டமின்கள், வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, folates, மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் கனிமங்கள் உள்ளன அதாவது பொசுபரசு, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் பூஜ்யம் கொழுப்பும் மற்றும் கொழுப்புகள் இருக்கிறது. கொத்தவரங்காய்யின் கசப்பான சுவையை குறைக்க புளி, அரைத்த தேங்காய் மற்றும் தக்காளி போன்ற பிற உணவு பொருட்களை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. கொத்தவரங்காய் விதைகள் மற்றும் விதையின் பௌடர் பிற உணவு பொருட்களிலும் பயன்படுகிறது, அதாவது சீஸ், சுவையூட்டிகள், ஐஸ் கிரீம்கள், உணவு மற்றும் உணவு பொருட்களை அலங்கரிக்கவும். Glyconutrients இருக்கும் காரணத்தால், கொத்தவரங்காய் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும், அதன் மூலம் நீரிழிவு தடுக்கப்படுகிறது. இதில் அதிக அளவு நீரில் கரையக்கூடிய நார்சத்து உணவு இருக்கிறது, அது ஜீரணத்திற்கு மற்றும் செரிமான செயல்பாட்டை அதிகரிக்கிறது, மற்றும் மலச்சிக்கலையும் நிவாரணம் செய்கிறது. கொத்தவரங்காய் மேலும் பெருங்குடல், எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் க்ரோன் நோய் (சிறுகுடற்பகுதி அழற்சி) நிவாரணம் தரும். இந்த உடல்நல நன்மைகள் பெற, நம் அன்றாட உணவில் கொத்தவரங்காய்யையும் ஒரு உணவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பொட்டாசியம் இருக்கும் காரணத்தால், இது இதய ஆறோகியத்தை அதிகரிக்கிறது, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது மற்றும் கொழுப்பு அளவுகளை குறைக்கிறது. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் இருக்கும் காரணத்தால், அது எலும்புகளை வலுவாக்கவும் மற்றும் எலும்பின் ஆறோகியத்தை அதிகரிக்காவும் உதவுகிறது. இரும்பு சத்து இருப்பதால், ஆர்பிசிக்கள் (RBCs) உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது மற்றும் இரத்த ஆக்சிஜன் உட்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது. இதனால் இரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. இதில் (Folic Acid) போலிக் அமிலத்தின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளத்தால், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு போலிக் அமிலத்தின் சீர்கேட்டின் பற்றாக்குறையை இடுகட்ட கொத்தவரங்காய்யை ஒரு நல்ல தாவர உணவாக எடுத்துக்கொள்ளலாம். இது குறைந்த கொழுப்பு (hypolipidemic) மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை (hypoglycemic) ஊக்குவிப்பதால், இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கும் ஒரு நல்ல தாவர உணவின் மூலம் பயன் கிடைக்கிறது மற்றும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. Nutrition Facts:- Servings Size 100gm Calories from Fat - 1% Sodium - 5% Total Carbohydrate - 26% Dietary Fiber - 309% Protein - 9% Calcium - 29% Phosphorous - 57% Energy - 16% Iron - 15%
Posted on: Tue, 15 Oct 2013 18:29:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015