கடந்த 28.05 2013 அன்று - TopicsExpress



          

கடந்த 28.05 2013 அன்று இடம்பெற்ற விபத்து தொடர்பாக எனது நண்பி செலீனா பீரிஸ் அவர்களினால் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதிலின் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது. தமிழ் மூலம் : சனூன் முகைதீன் இத்தகையதொரு பொறுப்பு கூறும் தன்மைக்கு முதலில் செயலாளர் அவர்களுக்கு இந்நாட்டின் பிரஜை என்ற வகையில் நன்றிகளை தரிவித்துக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலும் தொடர்ந்த கவனத்தில் உள்ளதுடன் நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன். செலீனா பீரிஸ் LLB (Hull) LLM (London) MAIS (Vienna) செயலாளர் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பதில் செல்வி. செலீனா பீரிஸ் அர்களுக்கு, 28.05.2013 அன்று உங்களின் முன்னால் விபத்துக்குள்ளாகி தங்களின் மனிதாபிமானத்தின் மூலம் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட விபத்துக்குள்ளான பயிற்சி தாதி சம்பந்தமான தங்களின் மின்னஞ்சல் தகவல் தொடர்பாக, சுகாதார அமைச்சின் செயலாளர் என்ற வகையில், முதலில், இக்காலத்தில் இத்தகைய செயற்பாடுகளில் இருந்து மக்கள் விலகியிருக்கின்ற நிலையில் நீங்கள் உடனடியாக செயற்பட்டு விபத்துக்குள்ளானவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்தமைக்காகவும் இரண்டாவதாக இச் சம்பவம் தொடர்பான புகைப்படத்துடன் எனது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்காகவும் தங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் தொடர்பில் நான் கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் உங்களது நியாயமான கோபத்தையும் வெறுப்பையும் புரிந்து கொள்கிறேன். நாங்கள் இத்தகைய பின்னூட்டங்கள் மற்றும் முறைப்பாடுகள் பொது மக்களால் அறிவிக்கப்படுவதை வரவேற்பதுடன் சுகாதார சேவை வழங்களில் நிலவும் குறைபாடுகளை விளங்கிக்கொள்ளவும் நிவர்த்திக்கவும் துணையாக அமையும். நான் ஏற்கெனவே இச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கவும் கிடைக்கப்பெறும் அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் என சுகாதார அமைச்சின் உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்றை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன். துரதிஷ்ட வசமாக , அர்ப்பணிப்புள்ள உத்தியோகத்தர்கள் பலரினால் மேற்கொள்ளப்படும் சிறப்பான சேவைகள் இத்தகைய நீங்கள் சந்தித்த ஒரு சிலரின் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளினூடாக மறைக்கப்பட்டு விடுகின்றது. உங்களது இச்செயற்பாட்டுக்கு மீண்டும் ஒரு முறை எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இந்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் இணைந்து ஊக்கமுடன் பணியாற்றுவோம். இங்ஙனம் கலாநிதி வை.டி. நிஹால் ஜயதிலக செயலாளர் சுகாதார அமைச்சு Dear Ms. Selyna Pieris, This refers to your email communication regarding an incident experienced when you were kind enough to take a patient (a trainee nurse) who was thrown out of a bus in front of you to the General Hospital of Colombo on 28.05.2013. As the Secretary, Ministry of Health, firstly I wish to thank you for coming forward to take this patient to a hospital as nowadays many people tend to ignore this type of involvement and secondly for taking action to bring the incident to my notice along with the photograph related to the incident. I am very concerned about the series of events that had taken place after the patient was taken inside the hospital and I can understand your feeling of anger and disgust. We welcome this type of information coming from the public as such feedback or complaints help us to understand the shortcomings in the healthcare delivery system and rectify them promptly. I have already taken action to appoint a high powered committee from the Ministry of Health to inquire into this incident and necessary action will be taken as soon as the report is available. Unfortunately all the good work done by the dedicated staff in the health sector get masked and undermined by the unacceptable behavior of some people like the ones you have encountered on this particular day. Once again I thank you about your concern and the steps you have taken as regards this matter and without getting discouraged let us all work towards a brighter future for our country. Best regards, Dr.Y.D.Nihal Jayathilaka Secretary/ Ministry of Health
Posted on: Wed, 19 Jun 2013 15:50:53 +0000

Recently Viewed Topics




© 2015