சுப்ரீம் கோர்ட் - TopicsExpress



          

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பயனற்றதாக்க மத்திய அரசு மும்முரம் : தினமலர் – 7 மணிநேரம் முன் கிரிமினல் வழக்குகளில்தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவிகள் உடனே பறிக்கப்பட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், கடந்த மாதம் அளித்த தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது அல்லது இந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரும் பணிகளில், மத்திய அரசுமும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகளில், கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட், இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியது. அவற்றில் கூறியதாவது: செல்லாதுகிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ.,அல்லது எம்.பி.,க்களை பாதுகாக்கும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, இந்த சட்டப் பிரிவு செல்லாது. கிரிமினல் வழக்குகளில், எந்த மக்கள் பிரதிநிதிக்காவதுதண்டனை விதிக்கப்பட்டால், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே, அவரின், எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவி பறிக்கப் படும். ஆனாலும், ஏற்கனவே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று, மேல் முறையீடு செய்துள்ளவர்களுக்கு,இந்த உத்தரவு பொருந்தாது.சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது. ஓட்டுப்போட உரிமையுள்ளவர் மட்டுமே, தேர்தலில் போட்டியிட முடியும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும், ஓட்டுப் போடும் உரிமையை இழந்து விடுகின்றனர். அதனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இவ்வாறு தீர்ப்புகளில்தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்புகளுக்கு மக்கள் மத்தியில், பெரும் வரவேற்பு இருந்தாலும், அரசியல் கட்சிகள் மத்தியில், இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே, இந்த தீர்ப்பு பேருதவியாகஇருக்கும் என, விமர்சித்துள்ளன.அதேநேரத்தில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக அளிக்கப்பட்ட, இந்தத் தீர்ப்புகளை, விரைவில் அமல்படுத்த, தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசுமும்முரமாக உள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள்கூறியதாவது:எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு களை, மறுபரிசீலனை செய்யக்கோரி, விரைவில், மத்திய அரசு மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய உள்ளது. அத்துடன், அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தால், இந்த விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்றும் வகையில், அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்து :@@சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில், அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, அனைத்துஅரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் மட்டுமே, அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படும். இல்லையெனில், அந்த யோசனை பரிசீலிக்கப்படாது.இவ்வாறு மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள்தெரிவித்தன. Like · · Share GR8 INDIAN DEMOCRACY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Posted on: Tue, 13 Aug 2013 04:38:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015