செய்யும் தொழிலே - TopicsExpress



          

செய்யும் தொழிலே தெய்வம் சிரமமான ஒரு வேலையைச் செய்யும்போது ஏனோ, தானோ என்றும் செய்யலாம், மிகவும் கவனம் செலுத்தி, அர்ப்பணிப்பு உணர்வுடனும் செய்யலாம். இந்தியா முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் என்று நான் நினைப்பது ஏனோ, தானோ என்று செய்பவர்கள் அதிகமாக இருப்பதுதான். உயிரைக் கொடுத்து வேலை செய்பவர்களைத் தட்டிக் கொடுக்க, பாராட்ட, அவர்களின் பங்களிப்பை, ஈடுபாட்டுணர்வை இனம்கண்டு மனம் உவந்து அவர்களை ஊக்கப்படுத்த நம்மில் பெரும்பாலானோர் தயாராக இல்லாததும் ஒரு மிக முக்கியமான காரணம். இதை நான் இங்கு ஒரு பதிவாகக் குறிப்பிடுவது ஏனென்றால், ஓய்வெடுக்காமல் பல மணி நேரம் பாடுபட்டு, மிகுந்த சிரமத்துடன் நான் செய்து முடிக்கும் வேலைகள் சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே அமெரிக்க, ஆஸ்திரேலிய நிறுவனங்களின் திட்டப்பணி மேலாளர்களிடம் இருந்துவரும் (மேம்போக்காக, கடமைக்காக இல்லாமல்) உணர்ந்து தெரிவிக்கப்படும் பாராட்டுதல்கள் என்னை எந்த அளவுக்கு உற்சாகப்படுத்துகின்றன என்று நான் அனுபவித்திருப்பதால்தான். இன்று ரூட் கெனால் சிகிச்சையின் கடைசி கட்டமாக, சிகிச்சை முடிக்கப்பட்ட கடைவாய்ப்பற்களுக்கு (மேல்வரிசையில் ஒன்று, கீழ்வரிசையில் ஒன்று – இவை மட்டு்ம் இல்லாமல் ஒரு missing tooth வேறு) capping செய்வதற்காக access மிகவும் சிரமமாக இருந்த பற்களைச் சீர்ப்படுத்துவதற்கு எங்கள் பெருங்குடி பல்மருந்துவர் திரு ஜெயக்குமார் சுமார் 90 நிமிடங்கள் போராடி, அருமையாகச் செய்துமுடித்தார். 90 நிமிடங்களும், கழுத்தைக் குனிந்து கொண்டு இருந்து, சற்று கவனம் பிசகினால் ஏடாகூடம் ஆகிவிடக்கூடிய பணியை மிகவும் அற்புதமாகச் செய்து, அவரை நம்பிச் சென்ற நோயாளியான எனக்கு உலகத்தரம் வாய்ந்த சிசிச்சையை அளித்தார். எனக்குக் கிடைத்த உயர்தர சிகிச்சை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உன்னதமான சேவை உணர்வு கொண்ட மருத்துவரை stone throw தூரத்தில் கொண்டிருப்பதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். இங்கு இதனைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பல்மருத்துவர் திரு ஜெயக்குமாருக்கு எனது உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். அவ்வளவு சிறந்த பல்மருத்துவரே, பணி முடிந்த பிறகு, the toughest task I have ever done என்று குறிப்பிட்டார் என்றால் பாருங்களேன். என் சொற்களைப் போலவே பற்களும் அருமையானவை தான் போலும்.
Posted on: Mon, 02 Sep 2013 15:01:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015