தமிழாக மாறிப்போன - TopicsExpress



          

தமிழாக மாறிப்போன ஆங்கிலம் ! 1) வீட்டுக்கு போனதும் தகவல் சொல்லுனு சொல்வோம் ஆனா இப்போ… message பண்ணு இல்ல missed call கொடு. 2) பாத்து சூதானமா, கோளாற போய்ட்டுவானு சொல்லுவோம் ஆனா இப்போ… Safeஆ போய்ட்டுவா. 3) சரி, ஆகட்டும்னு சொல்லுவோம் இப்போ என்ன சொல்லுறோம் ok, Ok done. 4) முன்னலாம் யாராது தெரியாதவங்கள கூப்பிடனும்னா ஏங்க, அய்யா, அம்மானு கூபிடுவோம் இப்போ hello, hello sir, hello madam.. இங்க என்ன போன்லயா பேசுறீங்க..? hello helloனு. 5) விருந்தினரையோ, நண்பர்களையோ பார்த்தா வணக்கம் சொல்லுவோம் இப்போ hai சொல்லிக்கிறோம். 6) எனக்கு இதுல விருப்பம், அதுல விருப்பம்னு சொல்லுவோம், இப்போ விருப்பம் interest ஆ மாறிப்போச்சு.. 7)யாரு காலையாவது மிதிச்சுட்டா சிவ,சிவானு சொல்லுவோம், இப்போலாம் எவன் கால மிதிச்சாலும் sorry தான். 8 ) நன்றி என்ற ஒரு வார்த்தையை தமிழன் மறந்தே போய்ட்டான்.. எதுக்கேடுத்தாலும் Thank you so much தான். 9) இது எல்லாத்துக்கும் மேல நம்ம காதலிக்கிற பொண்ணுகிட்ட நான் உன்னை காதலிக்கிறேன்னு அழகு தமிழ்ல சொல்லுறத விட்டுபுட்டு i love youனு சொல்லுறானுகளே.. Wait, dress, thanks, hai, hello, bye,Take Care, Interest, Problem, Miss you, Love you, Hateyou, Tv, Phone, Computer, Lap top, Watch, Pin, Safe,Lock, Purse, Key Chain, Cycle, Box, Calling Bell, Bottle,Excuse me, Pen, Pencil, rubber, Scale, File இப்படி பல வார்த்தைகள் தமிழோடு கலந்து விட்டது… இந்தவார்த்தைகளை உச்சரிக்காமல் தமிழே பேச முடியாது என்ற அளவிற்கு அடிமை ஆகிவிட்டான் ஆங்கிலத்திற்கு!!! - யாரோ
Posted on: Sat, 09 Nov 2013 17:02:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015