தலைவாவுக்கு யு சான்று - TopicsExpress



          

தலைவாவுக்கு யு சான்று தர தணிக்கை குழு மறுப்பு. . இது அரசியல் சதியா? நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் ஏ எல் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இதில் விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப்படம் மும்பை தமிழர்களுக்காக போராடும் தலைவனின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தலைவா படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடி. வருகிற 9ந் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள். போஸ்டர்களும் அடித்து குவித்து விட்டார்கள். டி.வி. எப்.எம். பத்திரிகை அனைத்திலும் விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்து விட்டார்கள். படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கும் வேந்தர் மூவீஸ் விளம்பரத்துக்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவா படத்திற்கு தணிக்கை குழு யு சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை. நேற்றுத்தான் தணிக்கைக் குழுவினர் படத்தை பார்த்திருக்கின்றனர். ஆனால் படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்க சென்ஸார் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார ்கள். தயாரிப்பாளர், இயக்குனர் அனைவரும் வாதாடியதால் கடைசியில் தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுக்க முன்வந்தனர். ஆனால் படக்குழுவினர் யு தான் வேண்டும் என்று பிடிவாதமாக சொன்னார்கள். அதனை ஏற்க தணிக்கை குழு மறுத்துவிட்டது. சில காட்சிகளை நீக்கினால் யு தருவாதாக சொன்னார்கள். அந்தக் சீன்கள்தான் படத்தில் முக்கியமானது கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்டதாம். இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். அங்கும் யு/ஏ உறுதி செய்யப்பட்டால் மும்பையில் மறு தணிக்கை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழுடன் படம் வெளிவந்தால் வரிவிலக்கு கிடைக்காது. இதனால் தயாரிப்பாளருக்க ு வரவேண்டிய கோடிக் கணக்கான ரூபாய் அரசுக்கு வரியாகச் சென்று விடும். வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வருமானத்தையும் சேர்த்துதான் வேந்தர் மூவீஸ் பெரும் தொகை கொடுத்து படத்தை வாங்கி உள்ளது. ஒரு வேளை வரிவிலக்கு கிடைக்காவிட்ட ் கொடுத்த பணத்தின் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும் என்று வேந்தர் மூவீஸ் கோரலாம். அதனால்தான் யு வாங்கியே தீருவது என்ற தயாரிப்பு தரப்பு உறுதியாக இருக்கிறது. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பிருக்கிறது. சமீப காலமா தமிழக அரசு விஜய்க்கு எதிராகவே செயல்பட்டு ஏனெனில் விஜய் பிறந்த நாள் அன்று பிரமாண்ட ரசிகர் மன்ற விழாவுக்கு தடைவிதித்தது. இப்போது தலைவா படத்துக்கு தொல்லை தர விஜய் தரப்பு கருதுகிறது. எது எப்படி இருந்தாலும் அறிவித்த தேதிக்குள் படத்தை வெளியிட்டு விடுஙங்கள் என்று விஜய் கூறியிருக்கிறாராம்.
Posted on: Sat, 27 Jul 2013 16:55:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015