புகைப்படம் எடுப்பது - TopicsExpress



          

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார். ... (பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?) ”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..” பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…” அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள். பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!
Posted on: Tue, 25 Jun 2013 10:36:31 +0000

Trending Topics



/div>
Business from your own home if you want to work on a computer in
BlackBerry Tour 9630 / Bold 9650 Piel Frama Two-Tone Leather

Recently Viewed Topics




© 2015