பிரஸ்னம் - TopicsExpress



          

பிரஸ்னம் சிறுவிளக்கம் என். தாமோதரன் பிரச்சனம் (Prasanam) என்றால் என்ன? மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால் அதன்பொருள் றிஹிஞீஞீலிணி. இந்தச் சொல் ஆதிகாலத்திலும். வித்வான்களாலும் பிரச்ன மார்கம் என்றே தெரியப்பட்டுவந்தது. அதாவது, மிக குழம்பிப் போயிருக்கும் விஷயங்களிலும் வேளையிலும் முடிவெடுப்பதற்கு (நல்லதோ - அல்லதோ ஆன பதில் எதிர்நோக்கிக் கொண்டு) ஜோதிஷ ரீதியாக - கிரகங்களின் தற்சமய இருப்பைக் கொண்டு இடம், ஏவல், பொருள் என்ற ரீதிக்கேற்ப ஸ்வய, மித்ர, சத்ரு, பந்து, த்ரேகாண, க்ஷேத்ர, நட்சத்திர, தேவதா, உபதேவதா, ப்ரத்யதிதி தேவதா ஸ்வரூபங்கள் இப்படி அநேக கோணங்களால் ஆராயப்பட்டு ஈஸ்வரக் கிருபையால் கிடைக்கும் விடையாகச் சொல்வதே ப்ரச்னமார்க்கம் - ப்ரச்ன ரீதியாகும். எப்பொழுது எதற்காக ப்ரஸ்னம்? பூமியில் பிறந்த குழந்தைக்கு ஜாதகம் குறித்துவைத்துக் கொள்வது மரபு. ஜாதகத்தில் சொல்லப்படும் கிரகநிலைகள், தசா - புத்தி, அஷ்ட வர்க்க பலங்கள், 12 பாவங்களிலும் உள்ள கிரங்களின் பாவபலங்கள் ஆகிய அனைத்தும் மனித குலத்தில் பிறந்த அனைவருக்கும் நல்லதோ, கெட்டதோ ஆன பலங்கள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றன. எந்த விதமான நாத்திகம் பேசுபவர்களுக்கும் வருடம் முழுவதும் ஒரே மாதிரியான அனுபவங்கள், உடல் ஆரோக்கியம், பணவரவு - செலவு என்பதெல்லாம் ஒரே சீராக அமைவதில்லை. நிச்சயம். ஏன்? சிந்திக்கவும். அப்பொழுது நமக்கு சுற்றிலும் இருக்கும் மண்ணில், பஞ்ச பூதங்களால் (பூமி, அக்னி, வாயு, ஜலம், ஆகாயம்) நிர்மாணிக்கப்பட்ட இந்த உடம்பில் ஏதோ ஒரு சக்தி ஆட்கொண்டிருக்கிறது. அது நம்மை இயக்கிக் கொண்டிருப்பது தெரியவரும். வருடம் முழுவதும் மணிக்கணக்கில் ஏற்படும் அனுபவங்களை முன் கூட்டியே கணக்கிடப் பட்டு எழுதிவைத்துக் கொடுத்து அதன் படியே நாளும், பொழுதும் அனுபவமாக்கிய வல்லுநர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் அது மிக சிரத்தையாகச் செய்யவேண்டிய ஒரு விஷயம். ஆகையால் தற்பொழுதுள்ள காலச் சூழ்நிலையில் அதை யாரும் செய்ய முடியாமல் போயிருக்கிறது. அப்படி ஜாதகங்களில், அதை முழுமையாக நம்பி வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு சில சமயம் மாறுபட்ட அனுபவங்களும், துன்பங்களும் ஏற்படலாம். அப்பொழுது இந்த பிரச்ன மார்க்கம் நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்பதே உண்மையும், பதிலும். When and Wherever Horoscope ends, Prasnna will start and reply இது ஓர் அருமையான விளக்கம். பிரஸ்ன முறைகள் (Metheds of Prasana Margam) உலகெங்கிலும் ஜோதிட நிபுணர்களால் அநேகவகையிலான ப்ரச்சின மார்கங்களை - உத்தியை கையாளப் பட்டு வந்திருப்பதை தெரியமுடிகிறது. பிராசீன மார்கங்களை (முதல்) காலங்களில் China, Tibet, Egypt, Mughal,& Western countries என்று உலகின் பல இடங்களிலும் அந்தந்த தேசத்திற்கேற்ப பிரச்னமார்க்கங்கள் இருந்தன. தற்பொழுதும் ஜோதிஷம், கபால ஜோதிஷம், எல்லாம் பிரசாரத்தில் உன்னை. அதில் நம்பிக்கையுடன் கேட்பவர்களுக்கு நல்ல விடைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இங்கு பாரத தேசத்தில் தட்சிண பாகத்தில் கேரளத்தில் ஜோதிடக் கலையில் பிரச்சன மார்க்கம் நிறைய பிரயோக ரீதிகளால் கணிக்கப்பட்டு கையாண்டு வருகிறார்கள். அதில் சில. 1. தாம்பூல பிரஸ்னம் 2. நிமித்த பிரஸ்னம் 3. தேவ ப்ரஸ்னம் 4. ஆரூட பிரஸ்னம் 5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் இப்படி அநேக மார்க்கங்கள் வழிகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தந்தப் பெயர்களில் குறிப்பிடும்படியே இவை ஒவ்வொன்றும். செயல்பாடு ரீதியாக உள்ளன. 1. தாம்பூல பிரஸ்னம் (வெற்றிலை) நிச்சயிக்கப்பட்ட நாளில், கோயில், குரு - கணபதி வந்தனங்கள் செய்து விஷயம் தெரிய வேண்டியவரால் எடுத்துக்கொடுக்கப்படும் வெற்றிலையை வைத்துக்கொண்டு, அதில் கிடைக்கும் கணிதத்தை வைத்து பாவ பலங்கள் சொல்லப்பட்டுவரும் முறை இது. தாம்புல சக்யை, தாம்பூல வடிவு, நிமித்தம், நேரம், கணக்கிடும் வழி ஆகிய அனைத்தும் மிகத் துல்லியமாக இருக்கவேண்டும். 2. நிமித்த பிரஸ்னம் கேள்வி கேட்கப்படும் நேரம், முகூர்த்தம், ஹோரை, சந்தர்ப்பம், முதல் வாக்கியம், முதல் அட்ஷரம், தூதலட்சணம், காதில் வரும் செய்தி, அதன்பொருள், இயற்கையில் இருந்து வரும் சில அறிகுறிகள். இவை அனைத்தையும் மனத்தை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, ஆழ்ந்த சிந்தனையில் வைத்து கணித்து கேட்கப்படும் கேள்விக்கு விடை அளிக்கும் முறையே இது. 3. தேவ பிரஸ்னம்: மனிதர்களுக்கு ஏற்படும் அவஸ்தை, கஷ்டங்கள் ஆகியன போன்றே மனிதர்களால், அல்லது தேவகணங்களால் கட்டப்பட்டு தலைமுறைகளால் வழிபட்டுவரும் தேவாலயங்களுக்கு ஏற்படும் கஷ்ட - நஷ்ட - ரோகாவஸ்தையை ஜோதிட ரீதியாக இறையருளால் சொல்லப்படும், கணிக்கப்படும் செயல் முறை தேவ பிரஸ்னம். இதில் 12 பாவங்களையும், கோவிலில் ஒவ்வொரு விஷயத்தையும், நபர்களையும், செயல்முறைகளையும் கண்டறிய உதவுகின்றன. (கோயில்களுக்கும் ஜாதகம் அமைத்து தசாசந்தி தோஷம் கணக்கிடும் முறை உள்ளது). 4. ஆரூட பிரஸ்னம் குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களை, அதன் நிவாரணங்களைத் தெரிந்து கொள்ள குடும்ப பிரஸ்னமாக வைத்துக் கொள்வதே ஆரூட பிரஸ்னம். ஆரூடம் என்றால் வீடுஎன்றும் ஒருபொருள் உண்டு. வாஸ்துதோஷநிவர்த்தியும் இதில் வரும். 5. அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் கோயில், குடும்பம், ஸ்தாபனம், அரசு என்று ஒரு கட்டுப் பாட்டில் இயங்கிகொண்டிருக்கும் அனைத்திற்கும் மேலே கூறிய 3 (தாம்பூலம், ஆரூடம், நிமித்தம்) முறைகளால் விடை கிடைக்காமல் போனால் மட்டுமே அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்து கொள்ளவேண்டும். என்பதே எனக்குக் கிடைத்த உபதேசம். தொட்டதற்கெல்லாம் - யாரும் ஏறுவதில்லை என்பது போல் இதுவும் மிகவும் தேவையுள்ளபோது மட்டும் கையாள வேண்டிய மிக சிரமமான முறை. இதில் அநேக விற்பனர்கள் கலந்துகொண்டு பலமுறைகள் கையாளப்பட்டு தேவஹிதம் தெரிந்துகொண்டு 8 கோணங்களிலும் சிந்தித்து சொல்லப்படும் முறையே இது. நிறைய விவாதங்கள் இதற்கு தேவைப்படும். மேலும் அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது முன்கூட்டியே நாள்கள், மற்றும் பஞ்சாங்கம் (வாரம், நட்சத்திரம், திதி, காணம், நித்யயோகம்) நிச்சயிக்கப்பட்டு செயல்பட்டாலும் பிரச்சா சமயம் சில தோஷங்கள் உண்டாகலாம். அவற்றையும் கணக்கில் கொண்டு தீர்க்கமான பலன்களைச்சொல்ல முடிகின்றன. உதாரணமாக தேவபிரச்னமாக அஷ்ட மங்கல்ய பிரஸ்னம் செய்யும் போது 1. தேவகோபம் 2. தர்மதேவ கோபம் 3.சர்பபாதை 4. பித்ருதாபம், பித்ருகோபம் 5. பிரேத பாதை 6. திருஷ்டி பாதை 7. வாக்குதோஷம் 8. விவிபோஜனம் 9. சத்ருபாதை 10. வாஸ்துவைகல்யம் (ஸ்தானதோஷம்) என்று அனைத்துவிதமான பதில்களும் கிடைக்க ஆராயப்படுகிறது யார் யார் செய்து கொள்ள வேண்டும்? யாரை அணுகவேண்டும்? மிகவும் சோதனைகாலத்தில் மட்டும், கடினமான நோய்களுக்கு டாக்டர்களைப் போய் பார்ப்பதைப்போலவே பிரஸ்னம் செய்து கொள்ள வேண்டும். நாளும், பொழுதும் ஜோதிடர்களை மட்டும் நம்பியே வாழ்க்கையை ஓட்டிக் கொள்பவர்களுக்கும் சேர்த்துத் தான் சொல்கிறேன் - ஜோதிடம் என்பது சோதனை இடம் அல்ல, ஜோதிடர் இறைவனும் அல்லர். தெய்வத்தின் அருளால், அவருடைய நேரமும் காலமும் நன்றாக உள்ள பொழுதும், கேள்வி கேட்பவறின் விமோசன காலமுமாகி இருந்து, தெய்வ வாக்கின் படியுள்ள பரிகாரவழிகளைக் கடைபிடித்து வருபவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியே தெய்வக்ஞன் என்ற ஜோதிடர். ஜோதிடத்தில் பரிகாரமே அல்ல, அது தலையெழுத்து என்று கடும் வாக்கு வாதம் செய்பவர்களும் அநுபவங்களை வைத்து ஆராய்ந்து தெரிந்து கொண்டு விதியை மதியால் வெல்லலாம் என்ற நம்பிக்கையால் (மனித வாழ்வே - நம்பிக்கையில் தான் இயங்குகிறது) நிம்மதி கிடைக்கலாம். பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளவர்களைத் தவிர்த்து முழுவதுமாக விடை அளித்து அவர் கூறும் பரிகாரங்களை முழு மனத்துடனும், நம்பிக்கையுடனும் செய்து கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆராய்ந்து கேட்டுத் தெரிந்துகொண்டு விளம்பரத்தால் மட்டும் பிரபலமானவர்களைத் தவிர்த்துக்கொண்டு பிரஸ்னம் செய்து கொள்வது சிறந்த பலன் தரும். பிரஸ்னத்தின் பரிகாரம் என்பது அடுத்த பகுதி. பரிகாரங்கள் தீர்க்கமாகவும், நடைமுறையில் செயல்படும் படியும் சொல்லவேண்டும் என்பதே முறை. நல்லதொரு மருத்துவர் நோயாளியின் பொருள், வசதி, செயல்பாடு, தாங்கிக்கொள்ளும் வலிமை என்று பல கோணங்களில் ஆலோசித்து மருந்து கொடுப்பதைப் போலவே பரிகாரமும். அதேபோல், ஜோதிடரைப் பார்த்து விட்டேன், என்னுடைய சகல கஷ்டங்களும் இன்றே தீர்ந்து விட்டது என்று நம்பி விடாதீர்கள். நோய்க்கு மருந்து, பிரஸ்னத்திற்கு பரிகாரம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஜன்மாந்திரக்ருதம் பாபம் வ்யாதி ரூபேண ஜாயதே; தத்சாந்தி ஒஷதேத், ஜபம், தானம், ஹோமாதி, அர்ச்சனா என்கிறது வேதம். அதாவது நமக்கு வரும் வியாதி ஆதி அனைத்தும் முன் ஜன்ம பாபத்தின் தொடர்ச்சியே. அதற்கு, ஜெபம், ஹோமம், தானம், அர்ச்சனை மற்றும் மருத்துவ ரீதியான மருந்து, வாழ்க்கை முறை என்பதே பொருள். கலியுகமாகிய இக் காலத்தில் நிறைய பாப பாரத்தை இறக்கிக் கொள்ள இவை அனைத்தும் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. எல்லாருக்கும் நல்ல மனசுத்தியைத் தருவதற்காக வேண்டிக்கொள்கிறேன். ஒரு பிரஸ்ன அனுபவம் பிரபலமான மத்திய தொழில் ஸ்தாபனத்தில் என்ஜினீயரான ஓர் அன்பர் விலாசம் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்தார். உட்கார்ந்து விஷயத்தை ஆரம்பிக்கும் முன் சற்று சாவகாசம் கேட்டேன். வந்தவரும் ஒப்புக்கொண்டார். சிறிய தியானத்திற்குப் பிறகு விஷயத்திற்கு வந்தோம். மகள்கள் இரண்டு பேரையும் தன்னுடைய என்ஜினீயரிங் பாரம்பரியத்தையைத் தொடர வைத்தார். பெரிய மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரண்டாவது மகள் கடைசி வருடம் பயின்று வருகிறார். சில நாள்களில் படிப்பு முடிந்து விடும். நன்றாகப் படிக்கும் அவளுக்கு கடந்த 3 செமஸ்டர்களிலும், மிகவும் எளிதான விஷயத்தில் சொல்லிவைத்தாற்போல் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி. அதனால் மிகவும் மன உளைச்சல், என்ன செய்வது? யாரிடம் கேட்பது? கரையேற என்ன வழி? பட்டப் படிப்பு நல்லபடியாக முடியுமா? ஜாதக ரீதியாக நல்ல படிப்பு, உத்யோகம் உள்ளது தெரியவந்தது. ராசி வரவழைத்து பிரஸ்னம் பார்த்தபொழுது குரு சாபம் என்கிறது தெளிவானது, விவரமாகக் கேட்ட பொழுது முழு விவரமும் வெளிவந்தது. வளரும் பருவத்தில் அறியாமையால் தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அப்பாவியான குருவை தோழிகளுடன் சேர்ந்து பரிகாசம் செய்துகொண்டது முக்கியமாக ஞாபகம் வந்தது. மற்றும் குடும்ப தேவதை வழிபடச் சென்று திரும்பி வருகையில் ஏதோ காரணத்தால் தட்சிணாமூர்த்தி சந்நிதானத்தை (தான்) மட்டும் வழிபடாமல் வந்ததும் பிரஸ்ன ரீதியாக விடை கிடைத்தது. பரிகாரமாக குரூஸ்தானியர்களை, குரு சன்னிதானத்தை நினைத்து மஹாவிஷ்ணு பூஜை பால் பாயஸ நைவேத்தியத்துடன் செய்துவிட்டு வஸ்திரம், தட்சினை சஹிதம் பிராமணப்ரீதி செய்து, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதியில் இரண்டு நாள்கள் தொடர்ந்து பஜனம் செய்துவிட்டு வந்த பிறகு எல்லாப் பேப்பர்களையும் ஒன்றாக எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று பட்டப்படிப்பு முடித்து நல்லதொரு கம்பெனியில் தாமதம் இல்லாமல் வேலையும் கிடைத்து, கல்யாணமும் ஆகிவிட்டதென்றார்.
Posted on: Wed, 13 Nov 2013 06:25:15 +0000

Recently Viewed Topics




© 2015