பண இருப்பு வீதம் - Cash reserve ratio - TopicsExpress



          

பண இருப்பு வீதம் - Cash reserve ratio இருப்பு வைப்புத் தேவை அல்லது பண இருப்பு வீதம் (reserve requirement or cash reserve ratio) என்பது ஒவ்வொரு வணிகமாற்றும் வங்கியும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புக்கள் அல்லது பத்திரங்களிலிருந்து (கடன் கொடுக்காது) குறைந்த அளவாக வைத்திருக்க வேண்டிய பண இருப்பை குறித்த நடுவண் வங்கி விதிக்கும் ஓர் கட்டுப்பாடு ஆகும். இந்தத் தொகை பொதுவாக வங்கியின் பணவைப்பறையிலோ நடுவண் வங்கியிடம் வைப்புக் கணக்கிலோ வைக்கப்பட்டிருக்கும். இருப்பு வீதம் சிலநேரங்களில் பணவியல் கொள்கையின் ஓர் கருவியாக பயன்படுத்தப்படும். இதன்மூலம் கடன் வழங்கல் அளவை மாற்றமடைந்து நாட்டின் கடன் வாங்கும் திறனும் வட்டி வீதங்களும் பாதிப்படைகின்றன.[1]. மேற்கத்திய நடுவண் வங்கிகள் குறைந்த மிகை இருப்பு [2] உள்ள வங்கிகளுக்கு பண நீர்மைச் சிக்கல்களை ஏற்படுத்துவதால் அருகாகவே இருப்பு வீதத்தை மாற்றுகின்றன; பெரும்பாலும் திறந்த சந்தைகள் மூலம் (அரசு கடன் பத்திரங்களை வாங்கியோ விற்றோ) பணவியல் கொள்கையை நிறைவேற்றுவதை விரும்புகின்றன. சீனாவின் மக்கள் வங்கியும் இந்திய ரிசர்வ் வங்கியும் இருப்பு வீத விகிதம் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன
Posted on: Sun, 06 Oct 2013 07:52:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015