மாணிக்கம்பிட்டி - TopicsExpress



          

மாணிக்கம்பிட்டி தவ்ஹீத் ஜமாஅத்தினரின் நோட்டீசுக்கு மறுப்பு!!!! குர்ஆன் சுன்னாவுக்காக உயிரையே கொடுக்க துணிந்த தவ்ஹீத் அமைப்பு கோழைகளாக மாறிய பின்னணி என்ன?? அன்பின் சகோதரர்களே!! அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான் நல்லதை ஏவி தீமையை தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களில் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்3:104 மேற்சொன்ன குர்ஆன் வசனத்துக்கு அமைய நமது சமுதாயத்தில் நடைபெற்ற சில மார்க்க விரோத நிகழ்சிகளை நான் எழுதி விமர்சித்து வந்தேன்.நான் எந்த இயக்கத்துக்கும் வக்காலத்து வாங்கவில்லை நான் விமர்சித்த விடயங்களில் குறிப்பாக மாணிக்கம்பிட்டி அல்ஹுதா பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால் திடல் தொழுகை மறுக்கப்பட்டமையும் சில் முக்கிய புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டமையும் மிகப்பிரபல்யாமாக பேசப்பட்ட விடயம் என்பதை யாவரும் அறிவீர்கள். இப்படி இந்த செய்தி பேசப்பட்டவுடன் இந்த வேலைகளை செய்வது தவ்ஹீத் அமைப்பினர்தான் என்ற ஒரு கருத்து வேகமாக மக்கள் மத்தியில் பரவியது அதற்கும் காரணம் இருக்கிறது பல வருடங்கள் திடலில் தொழுததும் இம்முறையும் திடல் தொழுகைக்கு அனுமதி எடுக்க பல வகைகளிலும் முயற்சி செய்து தோல்வி அடைந்தவர்களும் இந்த தவ்ஹீத் அமைப்பினர்தான் என்பதை முழு பொலன்னறுவையும் அறிந்த விடயம். இப்போது விடயத்துக்கு வருவோம் ஒரு அநியாயத்தை தட்டி கேட்க ஒரு இயக்கத்தில் இருந்துதான் செய்ய வேண்டு என்று ஒரு விதியும் இல்லை என்பதை தவ்ஹீத் அமைப்பினர் மறந்து விட்டு ஏதோ நன்மையை ஏவி தீமையை தடுத்தல் என்பது அவர்களுக்கு மட்டும் உரிய பணி என நினைத்தது மட்டும் இல்லாமல் அதை தனிப்பட்ட முறையில் யாராவது செய்தால் அதை தனி மனித விமர்சனம் என்றும் நினைக்கின்றார்கள் மேலும் தாம் செய்யாத ஒன்றுக்கு தாம் பொறுப்பு கூறமுடியாது என்ற அடிப்படையில் மாணிக்கம்பிட்டியில் ஒரு நோட்டீஸ் வெளியாக்கி உள்ளார்கள். அந்த செய்தில் சில Facebook நபர்கள் அவதூறு கூறுவதாகவும் அடுத்தவர்களை பற்றி விமர்சிப்பதாகவும் அறிகிறோம் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அப்படி செய்பவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுவிட்டு சில Facebook பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார்கள் அதில் பொலன்னறுவை செய்திகளையும் இடம்பெற செய்து இருந்தார்கள் இவர்கள் இப்படி நோட்டீஸ் வெளியிட்டதன் பின்னணி என்ன? பயமா? மிரட்டலா அல்லது சில காடைக்கும்பல்கள் பேஸ் புக்கில் கள்ள பெயர்களில் வந்து தவ்ஹீத் அமைப்பினரையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றி கேவலமாக பேசியதை அறிந்ததா? அல்லது உங்கள் ஜமாத்துக்கு கெட்ட பெயர் வரும் என்ற பயமா? எந்தக்கஷ்டமும் இல்லாமல் விமசிக்கப்படாமல் துன்புறுத்தப்படாமல் மார்க்கம் சொல்வது உங்கள் நோக்கம் என்றால் உங்கள் பெயரை தப்லீக் அல்லது ஜமாத்தே இஸ்லாமி என்று வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் சத்தியத்தை சொன்னால் எதிர்கப்படுவீர்கள் அதுதான் விதி சரி இப்போது உங்கள் தவ்ஹீத் அமைப்பின் இலட்சனத்தைப்பார்ப்போமா!!! உங்கள் பள்ளிக்கு வருபவர்கள் எல்லாம் உங்கள் கொள்கையில் உறுதியானாவார்களா? உண்மையில் நீங்கள் பூரணமாக கொள்கையில் இணைந்து கொண்டீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? அல்லது பள்ளி பக்கத்தில் என்றோ எல்லாக்கொள்கையும் சரிதான் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா? அல்லாஹ் தனது குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்ஈமான் கொண்டவர்களே இஸ்லாத்தில் பூரணமாக நுழையுங்கள் சைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்2:208 நான் சில கேள்விகள் கேட்கிறேன் இதற்கு பதில் சொல்லுங்கள் 1. உங்கள் கொள்கையில் சீதனக்கல்யானம் ஹராம் பெண் வீட்டு சாப்பாடும் ஹராம் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேர் இவைகளில் கலந்து கொள்கிறீகள் மறுக்க முடியுமா? உங்கள் ஜாமத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குடும்பத்துடன் முஸ்லிம் கொலனிக்கு கலியாணத்துக்கு போகவில்லையா? பென் வீட்டில் சாப்பிடவில்லையா? அண்மையில் நடந்த கமாலின் மகளுடைய கல்யான பென் வீட்டு விருந்தில் கலந்த உங்கள் ஜமாஅத் நபர்களை தெரியுமா? சொல்லவா 2. இன்னும் எத்தனை பேர் உங்கள் ஜமாஅத் உறுப்பினர்கள் இன்னும் பீடி சிகரட் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் பெயர் வேணுமா?? 3. தவ்ஹீத் வாதிகள் தவ்ஹீத் பள்ளியில் தராவீஹ் தொழும் அதே நேரம் அவர்களின் மனைவி மக்கள் அடுத்த பள்ளியில் தொழும் அவல நிலை தெரியுமா? பெயர் வேணுமா? தன் குடும்பத்தையே தன்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை உங்கள் தவ்ஹீதின் இலட்சணம் நல்லம் 4. இரண்டு பக்கமும் நடிக்கும் உங்கள் தவ்ஹீத் அமைப்பினரை சொல்லவா? 5. பெற்றோர்கள் தவ்ஹீத் ஆனால் அவர்களின் பிள்ளைகள் அடுத்த அணியில் இருந்து கொண்டு உங்களுக்கு எதிராக செய்யும் வேலைகளை சொல்லவா? 6. தவ்ஹீத் ஜமாஅத் அங்கத்தவர்கள் ஆணோ பெண்ணோ யாரும் காணிவேல் பார்க்க போகக்கூடாது என்று முடிவு எடுத்து இருந்தும் உங்களின் முக்கியமான ஒரு தவ்ஹீத் வாதியின் மகன் உட்பட மகள் மனைவி எல்லாரும் காணிவேல் பார்த்து ரசித்தது எதிர் அணியினரின் செல்போனில் பதிவாகியுள்ளது தெரியுமா? பாவம் அந்த தவ்ஹீத்வாதி இவருக்கு எதுவும் தெரியாது. 7. உங்கள் ஜமாத்தின் ஒரு மவ்லவியின் நிலை என்ன ஆடு மாடே உலகம் என்று இருக்கிறார் அவர் நல்ல எடுத்துக்காட்டு தவ்ஹீதின் வளர்ச்சிக்கு அன்பின் தவ்ஹீத் அமைப்பினரே இவைகளை நான் சொன்னது உங்களை கேவலப்படுத்த அல்ல மாறாக உங்களின் தவரை நீங்க திருத்தனும் தூய தவ்ஹீதை சொல்லணும் என்பதுதான் அப்படி உங்கள் வாசிக்கு மார்க்கம் சொல்ல புறப்பட்டால் நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள் மிகக்கேவலமாக என்பதை உத்தரவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மேலும் சில கீழ்த்தரமான நபர்கள் உங்களுக்கு ஏசுவதை அல்லாஹ்விடம் விட்டுவிட்டு நல்லதை செய்யுங்கள் கூலியை அல்லாஹ்விடமே எதிர்பாருங்கள் ஆக்கம் பொலன்னறுவை செய்திகள்
Posted on: Sun, 03 Nov 2013 00:44:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015