மெய்யான உலகிலும் - TopicsExpress



          

மெய்யான உலகிலும் பேஸ்புக் மாதிரியான பொய்யான உலகிலும் கடும் பிரச்சனைகளும் கருத்துக்களும் உலவும் இந்த காலகட்டத்தில் கொஞ்ச நாட்களாக எழுதவே இல்லை. இரண்டு காரணங்கள். ஒன்று-கடுமையான வேலை. இரண்டாவது-இனியவேல் என்றொரு ராட்சசன். சேரன் பிரச்சனையில் இன்று மதிமாறன் https://facebook/mathimaranv?hc_location=stream ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார். தாமினி தந்தை மேல் குற்றம் சுமத்தி புகார் கொடுப்படதை விடவும் சுயமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று கேட்கிறார். இது தான் என் கருத்தாகவும் உள்ளது. பலரும் காதலுக்கு வக்காலத்து வாங்குதாக எண்ணிக் கொண்டு ஒற்றைச்சார்பாக கருத்துக்களை அள்ளி வீசுகிறார்கள். பதினெட்டு வயதாகி விட்டாலே பெற்றோருக்கும் பிள்ளைக்கும் தொடர்பில்லை என்று. எத்தனையோ பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பெரும் தவறிழைத்தும், ஊதாரியாகவும், வாழப் பயந்தவர்களாகவும் உள்ளனர். அவர்களை எல்லாம் பெற்றோர்கள் அரவணைத்தும் வருகிறார்கள். 18 ஆகிவிட்டது போகட்டும் கழுதை என்று விட்டிருந்தால் அவர்கள் மிக்வும் துண்பப்பட்டிருப்பர்கள் அல்லது சமூகத்து துன்பமாக மாறி இருப்பார்கள். பிள்ளைகள் சரியான முடிவெடுக்கும் பக்குவத்தை பெற்றோர்கள் ஆதரிக்கச் சொல்லும் அதே வேளையில் தவறான முடிவெடுக்கும் பிள்ளைகளுக்கு சரியானதை காட்டும் பெற்றோர்களின் பொறுப்பையும் உணர்ந்தால் நலம். சேரன் ஒரு ஸ்டீரியோ டைப்/அமெச்சூர் முற்போக்கு வாதி அல்லது கொஞ்சம் முன்னேறுகிற பிற்போக்குவாதி என்பதை அவரின் படங்களின் வழி உணர்ந்து கொள்ளலாம். அவரின் வழிமுறைகள் தப்பாக இருக்கலாமே ஒழிய வறட்டுத்தனமான காதல் விரோதி அல்ல என்பது என் கருத்து.
Posted on: Thu, 08 Aug 2013 03:23:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015