மலையகத்தின் மூத்த - TopicsExpress



          

மலையகத்தின் மூத்த கவிஞர் மூதறிஞர் சக்தீ பால ஐயா அவர்கள் காலமானார் தலவாக்கலை லிந்துலை தோட்டத்தை பிறப்பிடமாகவும், வத்தளை மாபொலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர் மூதறிஞர் தனிவழிகவிராயர் கலாபூஷணம் சக்தீ பால ஐயா அவர்கள் தனது என்பத்தோன்பதாவது வயதில் 02.08.2013 வெள்ளிக்கிழமை றாகமை வைத்தியசாலையில் காலமானர். சக்தீ பால ஐயா அவர்கள் 26.07. 1925 ஆம் ஆண்டு அப்பாவு விஸ்வநாதன் அவர்களுக்கும் லக்ஷ்மி அம்மாளுக்கும் தலவாக்கலை லிந்துலையில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியினை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலை கல்வியினை தலவாக்கலை சென் பெற்றிக்ஸ் கல்லூரியிலும், உயிர் கல்வியினை இலங்கை தொழிநுட்ப கல்லூரியிலும் பயின்றவர். தனது பெயரில் பாலை (நிலம்) என்ற சொல் இருப்பதை விரும்பாத இவர் தனது பெயரை சக்தீ பால ஐயா என மாற்றிகொண்டவர். இவர் கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஊடகவியலாளர், விரிவுரையாளர் ஆய்வாளர் என பல் பரிணாமங்களில் பிரகாசித்தவர். கொழும்பில் அமைந்துள்ள இலங்கை தொழிட்நுட்ப கல்லூரியிலும் Heywood Collage of Fine Arts கல்லூரியிலும் விரிவுரையாளராகவும் தொழில்புரிந்தார். நான்காம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே மாணவர் மலர் என்ற இதழினையும், அதற்கு பின்னரான காலத்தில் யுத்த முனை என்ற அந்நியராட்சிக்கு எதிராக பத்திரிகையினையும் 1956 இல் வளர்ச்சி என்ற கலை இலக்கிய சமூக இதழினையும், 1960 ஆம் ஆண்டு தமிழ் ஒளி என்ற இதழினையும் வெளியிட்டவர். 1956 களில் வீரகேசரியில் உதவி ஆசிரியராகவும் 1970 களில் தொழிற்சங்க துறவி வி.கே.வெள்ளையன் அவர்கள் ஸ்தாபித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் இதழான மாவலி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். 1952 ஆம் ஆண்டு மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் என்ற நூலையும், சொந்த நாட்டிலே எனும் பாடல் நூலையும், 1997 ஆம் ஆண்டு சக்தீ பால ஐயா கவிதைகள் என்ற கவிதை தொகுப்பினையும், 2011 ஆம் ஆண்டுAnalysis of Ages of Lives on Earth and Dravidian culture என்கின்ற ஆங்கில நூலையும் எழுதியுள்ளார். 1956 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஈழத்து மலையக கவிஞரான ஸி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் In Ceylon’s Tea Garden என்ற கவிதை நூலினை தமிழாக்கம் செய்து ஸி.வியின் உணர்வுகளை தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியர். மூதறிஞர், வாழ்நாள் சாதனையாளர், தனிவழிகவிராயர், கலாபூஷணம், தமிழ் ஒளி, கவிச்சுடர் என பல விருதுகள் பெற்றவர். இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக பிரஜாவுரிமை அந்தஸ்த்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டு இலங்கை இந்திய வம்சாவளி பேரவை எனும் அமைப்பினை உருவாக்கி அதனை வழிப்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Posted on: Fri, 02 Aug 2013 01:31:42 +0000

Trending Topics



ss="stbody" style="min-height:30px;">
221, 22, 221....: message for today: The angels can see the

Recently Viewed Topics




© 2015