மள்ளர் அல்லது பள்ளர் - TopicsExpress



          

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்[1].இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்[2][3][4].இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர்;வருகின்றனர்.பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். குடும்பன் SC பட்டியல் (SC 35) மூப்பன் BC பட்டியல் (BC 65) காலாடி BC பட்டியல் (BC 35) காலாடி DNC பட்டியல் (DNC 28) மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)[5] இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பள்ளர்கள் இடையே பழக்கத்தில் உள்ள பெயர்கள் தமிழ்நாட்டில் எந்தப் பிரிவிலும் இல்லை.இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள். ‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது. இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவிலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்[6].மேலும் பள்ளர்கள் உலகம் முழுவதும் பழங்காலம் தொட்டு இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
Posted on: Tue, 29 Oct 2013 20:04:07 +0000

Trending Topics



/div>

Recently Viewed Topics




© 2015