ரஜினிக்கு கொஞ்சமும் - TopicsExpress



          

ரஜினிக்கு கொஞ்சமும் பயப்படாத விஜய்? : பொங்கல் ரேஸில் ஜில்லா கன்பார்ம்! வரும் பொங்கலையொட்டி ‘கோச்சடையான்’ படத்தை 10- ஆம் தேதியே ரிலீஸ் பண்ணப் போறோம் என்று நேற்றே ‘கோச்சடையான்’ டீமே அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டாங்க… தமிழ்நாடு முழுக்க சுமார் 800 தியேட்டர்களை கோச்சடையானுக்காக புக் பண்ற வேலையில அந்தப் படத்தோட தயாரிப்பு நிறுவனமும் முழுவீச்சுல கோதாவுல இறங்கிடுச்சு. இதனால் ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ்னு அறிவிக்கப்பட்ட விஜய்யின் ஜில்லாவுக்கும், அஜித்தின் வீரம் படத்துக்கு அதிக தியேட்டர்கள் கெடைக்கிறதுல சிக்கல் வரும் என்று அஜித் விஜய் ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். ஆனால் ‘ஜில்லா’ டீமோ அதைப் பத்தின எந்த பீலிங்க்ஸும் இல்லாமல் ரொம்ப கூலா இருக்காங்க. ‘கோச்சடையான்’ வந்தா எங்களுக்கு எந்த கவலையும் இல்ல.. கெடைக்கிற தியேட்டர்கள்ல ‘ஜில்லா’வை ரிலீஸ் பண்ணி கல்லா கட்டுவோம் என்று தெம்பு காட்டுகிறார் அந்தப் படத்தோட மொத்த கண்ட்ரோலையும் கையில வெச்சிருக்கிற தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகனும், நடிகருமான ஜித்தன் ரமேஷ். ஜனவரி 10-ஆம் தேதி கண்டிப்பா ஜில்லா படத்தை ரிலீஸ் பண்ணிடுவோம் என்று கூறியிருக்கும் அவர் இப்போதே தியேட்டர்களை திரட்டும் வேலையில மும்முரமா இறங்கி விட்டார். ‘ஜில்லா’ படத்தோட இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் மதுரையில நடக்குது. அது முடிஞ்சா மொத்த ஷூட்டிங்கும் ஓவர். வர பொங்கல் இரு துருவங்கள் மோதும் போல.... #Karthik
Posted on: Sun, 17 Nov 2013 05:15:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015