வெற்றிக்கிண்ணத்தை - TopicsExpress



          

வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய தமிழீழீ அணிகள் 04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15 வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு இறுதிப்போட்டியில் Germanyயுடன் விளையாடிய 13 வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 1 : 5 என்ற கணக்குடனும் Norwayயுடன் விளையாடிய 15 வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 2 : 3 என்ற கணக்குடனும் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. அதனைத்தொடர்ந்து மாலை 15:00 மணிக்கு வீரர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்குமான ஒன்றுகூடல் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் வீரர்கள் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. மாலை 17:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்தை உரக்கச் சொல்லி நிகழ்ச்சி நிறைவுற்றது. 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 : 1 Aabyhஒj IF (Danmark) காலை 09:45 மணிக்கு Aabyhஒj IF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Aabyhஒj IF அணி 1 இலக்கையும் தமிழீழ அணி 2 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். வைஸ்ணவன் சற்குணநாதன் 1 இலக்கையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கையும், எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர் 13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 3 Ranum-Overlade IK Vest (Danmark) காலை 09:45 மணிக்கு Ranum-Overlade IK Vest அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Ranum-Overlade IK Vest 3 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். சாரங்கன் சிவநாதன் 1 இலக்கையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Bogafjell IL (Norway) மதியம் 11:30 மணிக்கு Bogafjell IL அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் Bogafjell IL அணி 2 இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை தனதாக்கினர். வைஸ்ணவன் சற்குணநாதன் 2 இலக்குகளையும், கிரிஸ்சாந்தன் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர் 13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 SV Borussia Moehnsen (Germany) மதியம் 11:30 மணிக்கு SV Borussia Moehnsen அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் SV Borussia Moehnsen 1 இலக்குகளையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை தனதாக்கினர். சாரங்கன் சிவநாதன் 3 இலக்குகளையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
Posted on: Mon, 05 Aug 2013 08:55:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015