ஸ்ரீ லங்கா அரசின் - TopicsExpress



          

ஸ்ரீ லங்கா அரசின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவோம்! அமைதி வழியில் "சிறிலங்காவைப் புறக்கணிப்போம்" என்று ஓவல் மைதானத்தின் முன் நின்று போராடிய எம் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள். இலங்கைத் தீவிற்குள் தலைவிரித்தாடிய அரச பயங்கரவாத வேர்கள் எல்லை கடந்து பிறநாடுகளிலும் தமிழ் மக்களைக் குறி வைப்பது அம்பலமாகின்றது. இனவழிப்பிழிருந்து தப்பி பல்லாயிரம் மைல்கள் வந்து தஞ்சம் கோரிய இன் நாட்டில் நாமுண்டு நமது வேலையுண்டு என்று இருப்பவர்களைக் கூட சிறிலங்கா அரச பயங்கரவாதம் இனி விட்டு வைக்கப் போவதில்லை. இதன் முன்னோட்டமே ஓவல் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைதி வழியில் போராடிவரும் எம்மக்கள் இங்கும் உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றார்கள். இவை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடுமென அறிந்த சிங்கள இனவாதிகள் வன்முறையில் இறங்கி தமிழ் மக்களை வன்முறையைக் கையிலெடுக்க வைக்கப் பகீரதப் பிரயத்தனம் எடுப்பதனை இது நிரூபித்துள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்த இளையோரும் அங்கே அமைதி வழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களும் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இதனைப் புரிந்து கொண்டு நிலைமையைக் கையாண்டது எமது தரப்பின் நியாயத் தன்மையை மேலோங்க வைத்துள்ளது. அன்று நடந்த சம்பவங்களை தன்னிச்சையாக நடைபெற்ற ஒரு சம்பவமாக பிரித்தானிய தமிழர் பேரவை பார்க்கவில்லை என்பதுடன் இதனை இங்குள்ள அதிகார பீடங்கள் அனைத்தையும் தட்டிக் கேட்கும் நடவடிக்கைகளில் இறங்கி தமிழ் மக்களின் அமைதி வழிப் போராட்டங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும். எம் மக்களைத் தூண்டி விட்டு வன்முறையில் இறங்க வைக்க ஒடுக்குமுறையாளர்கள் விரிக்கும் சதிவலைக்குள் நாம் பலியாகி சனநாயகப் போராட்டத்தை முற்றாகப் பின்னடைவு செய்ய அனுமதிக்கலாகாது. நாளை நடைபெறவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு முழுமையான பங்களிப்பை பிரித்தானிய தமிழர் பேரவை, ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கும். பிரித்தானிய தமிழர் பேரவை இதில் கலந்து கொள்ளும் மக்களுக்கான விரிவான பயண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்துள்ளதுடன் இவ் அமைதிவழி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்களை பங்கு பற்றுமாறு வேண்டிக் கொள்கின்றது. லண்டன் மாநகரிலிருந்து புறப்படும் வாகன ஒழுங்குகளிற்காண தொடர்புகளிற்கு (07814484938, 07927023912,07956158453,07940114059,07832954281) Northwest London: Call 07814484938 Alperton Station - 9.30am South Harrow Station - 9.45am Rayners Lane Station - 10am Thamilan Kaddai, Hayes - 10am Thamilini Kaddai, Southall - 10am Northeast London: Call 07940 114059 29 Burges Road, Eastham, E62BJ, near Eastham Station - 9.30am Katpaha Vinajagar 07940 114059 Temple, Walthamstore, E17 4PM - 10am Southwest London:Call 07448541504 Mitcham Halford, CR42AD - 9.00 am OUTER LONDON Wolverhampton Call 07927023912 ASDA – 9 am Birmingham: Call 07927023912 Outside Balagi Temple – 9.30 am Coventry Call 07903842699 Nottingham: Call 07533381189 Liverpool: Call 07950367479 Bristol: Call 07960952919 Manchester: Call 07876705023
Posted on: Thu, 20 Jun 2013 01:33:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015