மனதைக் கரைத்து விட்டது - TopicsExpress



          

மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை. நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.. அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள், கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது. மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்.. நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா? உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா.. அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.. நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு! [[asmkslm]] Salem Mani
Posted on: Wed, 20 Nov 2013 02:30:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015