Arrambam Neutral Review மங்காத்தா என்ற - TopicsExpress



          

Arrambam Neutral Review மங்காத்தா என்ற சூப்பர் ஹிட், பில்லா II, சறுக்கலுக்கு பின்னர் வந்திருக்கும் தல அஜித் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கூடவே ஏற்கனவே “பில்லா” சூப்பர் ஹிட் கொடுத்த விஸ்னுவர்த்தன் அஜீத் கூட்டணி. இந்த மாபெரும் எதிர்பார்ப்புக்களை “ஆரம்பம்” பூர்த்தி செய்ததா என்பதை பார்ப்போம். வழக்கமான,தனக்கு வேண்டியவர்களின் அதர்மமான கொலைக்காக பழிவாங்கும் ஹீரோவின் கதை. புல்லட் ப்ரூஃப் ஆடையின் தரம் குறைவாக இருப்பதால் போலீஸ் அதிகாரி அஜித்தின் நண்பர் கொல்லப்படுகிறார். இந்த உண்மையை அறிந்த அஜித் அதன் பின்னணியில் நடந்த ஊழலை தெரிந்துகொண்டு அவர்களை பழிவாங்க புறப்படுகிறார். படத்தின் ஒன் லைன் இதுதான். கதை பழக்கப்பட்டதாக இருப்பினும் அதை ஓரளவுக்கு சலிக்காமல் கொண்டுசெல்லும்வகையில் சுபாவின் திரைக்கதை சிறப்பாக உள்ளது. மும்பையில் பல தொடர்மாடிக்கட்டிடங்கள் தீவிரவாதிகளால் குண்டுவைத்து தகர்க்கப்படுகின்றன. தீவிரவாதிகளை தேடி போலீஸ் வலைவிரிக்கிறது. இன்னொருபுறம் அஜீத், நயந்தாராவுடன் இணைந்து ஹக்கர் ஆர்யாவை கடத்திவந்து அவர்கள் உதவியுடம் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசியல்வாதிகளையும் குறிவைத்து தாக்குதலில் ஈடுபடுகிறார். இடைவேளைவரை அஜித் யார்? எதற்காக அரசியல்வாதிகளை பழிவாங்குகிறார் என்றெல்லாம் குழப்பமாகவும் மிக மெதுவாகவும் நகர்கிறது படம். இடைவேளையில் “அவர் யாரு தெரியுமா? அவர் எவ்வளவு அநியாயங்களை அநுபவிச்சிருக்கிறார் தெரியுமா? அவரு யாரு தெரியுமா? என்ற வழமையான ஃப்ளாஷ்பேக் எண்டரன்ஸ் மூலமாக ஃப்ளாஸ்பேக் ஓப்பன் ஆகிறது. போலீஸ் அதிகாரியான அஜீத், தனது நண்பனின் மரணத்தில் புல்லட் ப்ரூஃப் ஆடையின் ஊழல் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவர, அவர்களுக்கெதிராக நடவடிக்கையில் இறங்குகிறார். பதிலுக்கு நண்பனின் குடும்பம் கொல்லப்படுகிறது. நண்பனின் கொலைக்கு அஜீத் மீது பழிசுமத்தப்படுகிறது. அதில் இருந்து தப்பிக்கவும், ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளை பழிவாங்கவும் ஆரம்பிக்கிறார் அஜித். படத்திற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய ப்ளஸ் பாயிட் சந்தேகமில்லாமல் அஜித். சால்ட் அன் பெப்பர் ஸ்டைலில் படம் முழுவதையும் ஒரே ஆளாக தாங்கிப்பிடித்திருக்கிறார். இன்னொரு ப்ளஸ்பாயிண்ட் விஸ்னுவர்த்தனின் ஸ்டைலிஷான மேக்கிங். இவற்றைவிட சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இடைவேளையில் வரும் சண்டைக்காட்சி, துபாய் வங்கியில் இருந்து பணத்தை மாற்றும் காட்சி போன்ற ஒரு சில காட்சிகள் நன்றாக இருக்கின்றது. ஹக்கராக வரும் ஆர்யா, காலேஜ் பையனாக அறிமுகமாகும் காட்சி அட்டகாசம். ஆர்யாவின் புது கெட் அப் வித்தியாசமாக இருக்கிறது. டாப்சி ஏன் வருகிறார் என்று தெரியவில்லை. அவ்வ்வப்போது அஜித் டாப்சியை கடத்தி வைத்து ஆர்யாவிடம் வேலை வாங்குவதற்கு மட்டும் உபயோகப்பட்டுவிட்டு போகிறார். கதை ரொம்பவே மெதுவாக நகர்கிறது. ஒரு சில இடங்களில் வேகமெடுத்தாலும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்த அது போதாது. என்ன காரணம் என்று தெரியவில்லை, அடிக்கடி அஜித்தை ஸ்லோமோஷனில் காட்டுகிறார்கள். ஸ்லோமோஷனில் அஜித் நடந்தால் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நப்பாசையோ? வழக்கமாக தல படம் என்றால் பின்னணியில் பிச்சு உதறும் யுவன் இந்தமுறை நன்றாகவே சொதப்பியிருக்கிறார். பல இடங்களில் பின்னணி இசை நாராசமாக காதுகளை கிழிக்கிறது. மொத்தத்தில் பார்த்து பழகிவிட்ட கதை, சில இடங்களில் வேகமெடுத்தும் பல இடங்களில் மெதுவாக நகரும் திரைக்கதை, அஜீத், ஸ்டைலிஷ் மேக்கிங் என்ற ப்ளஸ் பாயிண்ட்கள். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த படம் பிடிக்கலாம். சாதாரண ரசிகர்களை கவருமா என்றதில் சந்தேகமே.
Posted on: Thu, 31 Oct 2013 13:22:00 +0000

Recently Viewed Topics




© 2015