Unable to share the info given Mr.Ramanathan. Hence copying and - TopicsExpress



          

Unable to share the info given Mr.Ramanathan. Hence copying and pasting it... மாந்தி என்பவர் யார்? ---------------------------- *மாந்தி என்பவர் சனி பகவானின் புதல்வர் ஆவார்.இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு குளிகன். *பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது. *தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தா லும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். *கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கüல் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். *ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார். *குளிகன் காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்; அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். மனைவியுடன் உறவு கொள்ளலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். பாங்கில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குளிகன் காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். *அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை(மரண இறுதி காரியம் போன்றவை)குளிகன் காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும். *பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்கüல் தீய பலன்களையே அüப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பது சிறந்த பலனாகும் *மாந்தியின் துன்பங்களில் தப்பிக்க சனீதோறும் ஆஞ்சநேயருக்கு விளக்கேற்றி வழிபட்டால் போதும்.துன்பங்கள் விலகும்.
Posted on: Fri, 13 Sep 2013 11:36:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015