popularfronttn.org/news.php?id=1792 2013 ம் - TopicsExpress



          

popularfronttn.org/news.php?id=1792 2013 ம் ஆண்டிற்கான கல்வி உதவி தொகை திட்டம் அறிவித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுடெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற "பள்ளி செல்வோம்" பிரச்சாரத்தின் இறுதியாக பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை தடையில்லாமல் தொடர்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.. 2013-2014 வருடத்தில் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து மூன்றுவருடமாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்படுத்தி வருகிறது. வட்டியில்லாமல் கடன் உதவி வழங்கும் அடிப்படையில் இத்திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து விட்டு பணிக்கு செல்லும் காலங்களில் சிறிய தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையினை கடனாக கொடுப்பதின் காரணத்தால் சிலர் மட்டுமே பயனடைய முடியும். அதே சமயம் கடன் பெற்றவர்கள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தும்போது பிறருக்கும் அதே போன்ற உதவியை செய்ய இயலும் என்ற அடிப்படையிலேயே உதவித்தொகைகள் கடனாக வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கி இருக்கின்ற 10ஆம் வகுப்பு மற்றும் +2 படித்து முடித்த மாணவர்கள் மட்டுமே இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை கல்வி கற்கவும், தொழிற்துறை (டிப்ளமோ) கல்வி பயிலவும் இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படும். முதுகலை (பிஜி) படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாநில அலுவலகத்திற்கு Coordinator, Popular Front Loan Scholarship Prgramme-2013 என்று தலைப்பிட்டு வருகின்ற ஆகஸ்ட் 10 ற்குள் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது popularfrontscholarship@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். Address 1)Rajasthan 256, Near PNB Muslim school, Moti Doongri Road, Jaipur, Rajasthan 2)West Bengal 32/A Lower range, 2nd floor,Beck bagan,kolkota-700017 3)Manipur Lilong Bazaar, Arapti Lamkhai, Thoubal District, Manipur-795130 4)Andhra Pradesh 18-13-8/A/56,Bandlaguda,Chandrayangutta,Hyderabad, Andhra Pradesh-500005 5)Karnataka No. 5, SK Garden, Benson Town, Bangalore, Karnataka-560046 6)Tamilnadu & Pondicherry New 184/Old 229,2nd floor, Lingi chetty street, Mannadi, Chennai 600001 7)Kerala Unity House, Rajaji Road, Calicut, Kerala-673004 8)Goa Konkan House ,2nd Floor SAS Manzil,Near Alfa corner ,Chandrawada, Fatorda Goa-403602 9)Maharashtra No-3 ,Golden Appartment 1041-New Nanapeth , Pune-2 Maharashtra 10)All other states and union territories G-66, 3rd floor , kalindikunj, Noida Road ,New Delhi-110025 விண்ணப்பங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளவும். popularfrontindia.org/pp/sites/default/files/Notification%20and%20Appln%20form.doc சென்ற ஆண்டைவிட பல மடங்கு அதிகரித்து 1 கோடி ருபாய் இந்த வருடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவினால் இது அதிகரிக்கும் என நம்புகிறோம். O.M.A.ஸலாம் தேசிய பொதுச்செயலாளர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - புதுடெல்லி POPULAR FRONT OF INDIA State Head Quarters, new no 184/old no 229, ,2nd Floor, lingi chetty street, mannady Chennai - 600 001.Tamilnadu, Ph:044-64611961, Fax:044-25224003 popularfronttn.org popularfrontindia.org
Posted on: Thu, 04 Jul 2013 11:40:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015