இன்டீரியர் - TopicsExpress



          

இன்டீரியர் டிசைன் உட்புற அலங்காரம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. கட்டிடக்கலையின் அம்சங்கள், பொருளின் வடிவமைப்பு மற்றும் சுற்றுசூழல் உளவியல் போன்ற பல அம்சங்கள், உட்புற பரப்பை, நேர்த்தியாகவும், படைப்புத்திறன் மிக்கதாகவும் மாற்றும் பணியில் கலந்திருக்கின்றன. ஒரு உட்புற அலங்கரிப்பாளர் என்பவர், தனது திறமையை வெளிப்படுத்தும்போது, வாடிக்கையாளரின் தேவையையும் மனதில் கொண்டு, அவரை திருப்திப்படுத்த வேண்டும். தான் ஏற்கனவே திட்டமிட்ட வடிவமைப்பு முறையை மாற்றம் செய்யவேண்டிய நிலை வந்தால், வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து, அதை மாற்றிக்கொள்ள அலங்கரிப்பாளர் தயங்கக்கூடாது. உள்கட்டமைப்பின் பிரம்மாண்ட வளர்ச்சியால், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலும் இன்டீரியர் டிசைன் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: நல்ல படைப்புத் திறன்தான் இத்துறைக்கு அடிப்படையான மூலதனம். இத்தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். அலங்காரம் தொடர்புடைய பலவித பொருட்களைப் பற்றிய விரிவான அறிவும், அறிமுகமும் இருக்க வேண்டும். மேலும், எந்தெந்த வகை அலங்காரங்களுக்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றியும் தெளிவான அறிவை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்களின் நிதிநிலைக்கேற்ப, ஒரு தெளிவான திட்டத்தை உடனடியாக தயாரித்து வழங்க முடியும். படிப்புகள்: ஜெய்ப்பூரில் உள்ள அயோஜன் ஸ்கூல் ஆப் ஆர்க், இன்டீரியர் டிசைன் பிரிவில் 5 ஆண்டு படிப்பாக வழங்குகிறது. சென்னை பல்கலை கல்லூரிகளில் பி.எஸ்சி., மற்றும் பி.எப்.ஏ., படிப்பாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூன்று ஆண்டு பி.எஸ்சி., ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ படிப்புகளாக வழங்குகின்றன. கோவை அவினாசிலிங்கம் பல்கலை பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் உடன் இன்டீரியர் டிசைன் பாடப்பிரிவை வழங்குகிறது. கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருப்பதே, உட்புற அலங்கார படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி. பலவித கல்வி நிறுவனங்களில், உங்களின் வரைதல் மற்றும் வடிவமைப்பு திறனை சோதிக்கும் வகையில், நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இத்தேர்வுகளில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும். இப்படிப்பை மேற்கொள்வதற்கான சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: thanks இந்தியன் குரல்: Madras University AvinashilingamUniversity, Coimbatore Mangalore University University of Mumbai Arch Academy of Design, Jaipur Amity School of Design, Delhi Guru Nanak Dev University, Amristar
Posted on: Thu, 27 Jun 2013 17:28:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015