இன்று பெரும்பாலான - TopicsExpress



          

இன்று பெரும்பாலான நாடுகள் மற்றும் தனித்தனி மொழிகள் பேசும் மாநிலங்கள் அல்லது பகுதிகள் இருப்பதிற்கு காரணம் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் இதற்கு முன் ஒரு பலம் பொருந்திய மன்னராட்சி இருந்ததினால்தான் . அந்த மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் ஏதோ ஒரு மொழி வளர்த்திருக்கும் ..அந்த மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் இருந்த சிறு குடி மொழிகளை எல்லாம் தின்றுதான் இந்த மொழிகள் வளர்ந்திருக்கும்...பின்தான் ஒரே பொது மொழி அந்த குறிப்பிட்ட பகுதியில் கொடி நாட்டி இருக்கும் . அந்த மொழி பேசும் மக்களுடைய பகுதிகள் தனி நாடாகவோ , மாநிலமாகவோ மாறி இருக்கும் ... பலமான அரசுகள் தோன்றாத அல்லது அன்னியர் படையெடுப்பு இல்லாத சில தீவுகளை பார்த்தால் அங்கே பல ஆயிரம் மொழிகள் , இனக்குழுக்கள் இருப்பதை காணலாம்..இதற்கு காரணம் இவர்கள் ஒரே குடையின் கீழ் ஆளாப்படாததே..ஒன்றோடு ஓன்று கலந்து புதிதாக பெரிய இனம் அல்லது மொழி தோன்ற பல இனங்களை வென்று ஒரே குடையின் கீழ் ஆண்ட ஒரு மன்னராட்சி அவசியம் .. வெறும் எழுபது லட்சம் மக்கள் தொகையே இருக்கும் Papua New Guinea வில் 840 மொழிகள் இருக்கிறது ..தென்னிந்தியா அளவுக்கு இருக்கும் தீவு என்றாலும் அன்னியர் படையெடுப்பால் ஏற்பட்ட ஆட்சியோ , அல்லது அங்கிருந்தே தோன்ற வேண்டிய பெரிய அரசோ தோன்றாதுதான் .. .. நாடு என்பதை பார்த்தால் , அதுவும் இந்தியா என்பதை பார்த்தால் முன்பு எப்போதும் இல்லாத ஒரு பெரிய நாடு இப்போது உருவாக காரணம் இந்த பெரும் நிலப்பகுதி இஸ்லாமியர்கள் ஆட்சியின் கீழ் வந்ததுதான் ..அவர்கள் வரவில்லை என்றால் இங்கே இருந்தே தோன்றிய ஒரு இனக்குழுமத்தால் இத்தனை பெரிய நாட்டை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்க முடியாது ....(அதற்கு பேரரசை தோற்றுவிக்க கூடிய பலம் பொருந்திய மன்னர்கள் வேண்டும் ..இந்தியாவில் தோன்றிய பேரரசுகள் வெகு சிலதான் . சோழப்பேரரசு உட்பட, அதுவும் இந்தியாவில் இன்றைய இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தைத்தான் ஆண்டது) . இஸ்லாமியர்கள் வருகைதான் இந்தியா என்ற இன்றைய நாடு உருவாக காரணம் . பின் வந்த ஆங்கிலேயர்களுக்கும் இந்த துணை கண்டம் ஒரே நாடாக தெரிந்ததிற்கு காரணம் அதற்கு முன் இருந்த ஆட்சிதான் ..அவர்களும் அதையே தொடர்ந்தார்கள் ..ஒரு பெரிய நாடு உருவாயிற்று...(எனினும் அன்னியர் தான் இந்த நாடு உருவாக காரணம் என்பதை சொல்ல வெட்கப்பட்டு ...அந்த காலத்தில ...பாரதம் ...அது இது என்றெல்லாம் சொல்லி கொள்வது இஸ்லாமியர் வருகைக்கு முன்னாலும் இங்குள்ள மக்களுக்கு பொதுவான விஷயங்கள் இருந்தது என்று சொல்லி கொள்ளத்தான் ..ஏன் என்றால் முஹம்தியர் அன்னியர் மட்டும் அல்ல வேற்று மதத்தினர் ...எனவே அதை ஏற்று கொள்ள தயக்கம் ... .எனினும் இந்தியா என்ற நாடு உருவாக இஸ்லாமிய படையெடுப்புதான் காரணம்) அன்னியர் படை எடுப்புகான வாய்ப்புகள் இல்லாத பகுதிகளில் பெரிய மொழியும் உருவாகி இருக்காது .. நாடும் உருவாகி இருக்காது ..ஏன் என்றால் அதற்கான அவசியம் இருந்திருக்காது .... பூர்வகுடி மக்களிடம் இருந்தே ஒரு பெரிய அரசு ஓன்று தோன்ற வேண்டும் என்றால் அன்னியர் படையெடுப்பு பற்றிய பயம் அந்த மக்களிடம் இருக்கவேண்டும் ..அந்த பயம் தான் பொது ஒற்றுமையை கொண்டுவரும் .அங்கிருந்தே ஒரு பெரிய அரசு தோன்ற வழி வகுக்கும் ... எனவே கரை ..ச்சே ..அன்னியர் படையெடுப்பு நல்லது ..அதுவே உள்ளிருந்தோ, வெளியில் இருந்தோ பேரரசுகள் உண்டாக வழிவகுக்கும்... (ஏன் இப்படி புலம்புறேன்னு கேட்காதீங்க ...அந்த குறிப்பிட்ட படத்தோட லிங்க் கொடுத்தது ஒரு தம்பி ....அதை பார்க்க பயந்துகிட்டுதான் இப்படி ......)
Posted on: Wed, 21 Aug 2013 16:08:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015