இப்படித் தாங்க நாங்க.. We are - TopicsExpress



          

இப்படித் தாங்க நாங்க.. We are called Engineers!! 1) ஒரு நிமிடத்தில் எழுபது வார்த்தைகளை கூட எழுதி முடிக்க எங்களால் முடியும். ஆனால் எழுதி முடித்தப் பின் எங்கள் கையெழுத்தை எங்களாலே படிக்க முடியாது. 2) நாங்கள் தொலைபேசியுடனும், கணினியுடனும் செலவிடும் நேரம் எங்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை விட அதிகம். 3) 3 வயது குழந்தையிடம் " வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?" என்பதை scattering effect , interference and diffraction கொண்டு விளக்கிச் சொல்லுவோம். 4) தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் வரும் ஈமெயில் யை கூட சரியாகப் புரிந்துக் கொள்ளுவோம். 5) படிக்கும் காலத்தில் நாங்கள் xerox க்கும் print க்கும் செலவிட்ட தொகை எங்கள் தினசரி பாக்கெட் மனி யை விட அதிகம். 6) எவ்வளவு தெளிவாய் கேள்வி கேட்டு மடக்க நினைத்தாலும் , கேள்வி கேட்டவரையே குழப்பும் அளவிற்கு தெளிவாய் ஒரு பதில் சொல்லிடுவோம். 7) 10 நாட்களுக்கு முன் தந்த வேலையை 9 வது நாள் இரவு எடுத்து விடிய விடிய வேலை செய்து 10 வது நாளின் கடைசி பத்து நிமிடங்களுக்குள் ஒப்படைத்து விடுவோம். 8. காலை 10 மணிக்கு செல்ல வேண்டியஅலுவலகத்திற்கு 9 35 க்கு எழுந்து சரியாய் பத்து மணிக்கு சென்றிடுவோம். 9) எங்களுக்கு தரப்படும் வேலைகளை எடைப் போட்டுப் பார்த்தால் எங்கள் உடல் எடையை விட அதிகமாக இருக்கும்.சில நேரத்தில், செய்யும் வேலைக்கும், வாங்கும் சம்பளத்திற்கும்சம்பந்தமே இருக்காது. 10) ஆங்கிலத்தை அழகாய் binary யில் மொழி பெயர்த்திடுவோம். எப்போதும் கணிதத்தில் யோசிப்போம், அறிவியல் தவிர மற்ற அனைத்தையும் எளிதில் புரிந்துக்கொள்ளுவோம்...
Posted on: Thu, 01 Aug 2013 06:25:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015