உத்தரகாண்டின் பிரளய - TopicsExpress



          

உத்தரகாண்டின் பிரளய வெள்ளத்தில் அதிகாரப்பூர்வமாக 3000க்கும் மேற்பட்டவர் மரணமடைந்ததாகவும் 20000க்கும் மேற்பட்டவர் காணாமல் போனதாகவும் அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன நேற்று கூட என்னோடு ஒருவர் தன் குடும்பம் காணாமல் போன விபரங்களை பகிர்ந்து கொண்டார் எனது செய்திகள் அவருக்கு ஆறுதல் அளித்தபோதும உண்மையை சொல்லாமல் சொல்லிக் கொண்டோம் இது போன்று எண்ணற்ற மக்கள் தங்கள் உறவினர்களை தேடிக் கொண்டு இருக்கின்றனர். 20 நாட்களுக்கும் மேலாகியும் வரமாட்டார்க்ள் என்கிற நம்பிக்கையை என்னால் கூட இழக்க முடியவில்லை எனது உறக்கமும் கனவும் ஏராளமாய் பாதிக்கபட்டு உள்ளதை என் மனத்தின் செயல்பாடுகளை கவனிப்பதில் உணர்கிறேன் என்னை கவனிக்கும் போதெல்லாம் அந்த மக்களின் இழப்பை உணர்கிறேன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்களை அடையாளம் காணவே முடியாது என்கிற நிலை உள்ளது அந்த மண்ணில் புதைந்து போன மனிதர்களை எடுக்கவே முடியாது என்கிற நிலை உள்ளது இவர்களில் பாலகர்கள் , இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோர் என எல்லா ரகங்களும் அடங்குவர். காலபைரவ கர்மா அல்லது சாந்தி செய்யச் சொல்லி பரிந்துரைக்கலாம் என்றால் அவர்கள் உயிர் பிழைத்தார்களா இல்லையா என்பதே தெரியாத நிலையில் (நிதர்சனத்தை அறிந்தாலும் )மரணமடைந்ததாக எப்படி சொல்வது ஆயினும் ஏதோ ஒரு முடிவிற்கு வர வேண்டிய சூழலில் அரசாங்கமும் வருகிற ஜுலை 15 தேதிக்குள் தொடர்ப்பு எல்லைக்குள் வராத காணாமல் போனவர்களை இறந்து விடடதாக அறிவிப்பு செய்ய இருக்கிறது அரசு அந்த பட்டியலின் படி நிவாரண உதவிகள் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட இருக்கிறது உண்மை நிலவரம் என்னவென்றால் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை சுமார் 5000க்கும் கீழேயே இருப்பதாக உணர்கிறேன் ஆனால் என் கணிப்பு படி சுமார் 50000ஐ இந்த காணாமல் போனவர்கள் பட்டியல் தொடும் என்பது பலருக்கு எங்கு பதிவு செய்ய வேண்டும், யாரிடம் பதிவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் இன்னமும் தெரியாத அரசாங்க நடைமுறைகள், அவர்களது இயல்பான விழிப்புணர்வின்மை, அரசு உழியர்களின் எல்லைகள், அரசியல் என பல பல அம்சங்கள் உள்ளன நேற்று பேசியவர் கூட , ஒரு முன்னனி தொலைக்காட்சி அவர்களது குடும்பம் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளது பின்னர் அவர்களது செய்தி தவறு , உண்மை நிலவரம் அறிய முடியவில்லை என்று ஆதாரப் பூர்வமாக கூறி அவர்கள் எப்படி உறுதி செய்தார்கள் என்று கேட்டதற்கு , ஏதோ தகவல் தவறாகிவிட்டது , சாரி என சொன்னதோடு சரி இத்தகைய அனைத்து மனிதர்களுக்கும் நன்கொடை செலுத்தி காலபைரவ கர்மாவோ அல்லது சாந்தியோ செய்ய முடியுமா என்பது தெரிய வில்லை ஏதோ அவர்களது சக்திக் கேற்ப நன்கொடை தரச் சொல்லலாம் தென்மாநிலங்களை விட என் வட மாநிலங்கள் மந்தாகினியின் பிரளயத்தில் இழப்பை அதிகம் சந்தித்து இருக்கின்றன கடநத் 1 மாதமாக தினசரி நான் உரையாடிய , என் மீது அன்பு செலுத்திய பல இருதயங்கள் துடிக்கின்றனவா அல்லது நின்று போயிவிட்டதா எனத் கண்டு பிடிக்க முடியாத நிலை எப்பெருமான் ஈசனே கருணை கொண்டு அவ்வுயிர்களுக்கு முக்தி அளித்திட வேண்டும் யாராவது எந்தன் ஈசனாம் சத்குருவை கேட்டுச் சொல்லுங்களேன், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் ஆசிரமத்தின் ஒரு வழிகாட்டுதல் சத்குருவின் செயதியை தாங்கி வந்தால் போதும் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காக உங்கள் மலர்பாதங்களை என்றும் வணங்குவேன் அன்புடன் போனஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்வாமி ஸுஷாந்தா
Posted on: Fri, 05 Jul 2013 10:06:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015