கேள்வி: என் - TopicsExpress



          

கேள்வி: என் கம்ப்யூட்டரை, பாஸ்வேர்ட் கேட்கும் ஸ்கிரீன் இல்லாமல், பாஸ்வேர்ட் தராமல், நேரடியாகத் திறந்து இயக்க முடியுமா? என் கம்ப்யூட்டரை வேறு யாரும் இயக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த ஏற்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறேன். அதற்கான செட்டிங்ஸ் வழிகள் என்ன? கே. செந்தில் ராஜன், திருப்பூர். பதில்: உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை என்னவென்றால், இப்போது இருக்கிறபடியே கம்ப்யூட்டரை விட்டுவைக்கவும். என்னதான், வேறு நபர்கள் உங்கள் கம்ப்யூட்டரைத் தொட மாட்டார்கள் என்றாலும், என்றாவது ஒரு நாள், ஒரு வேளையில், நீங்கள் அறியாமலேயே, யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரை அணுகலாம். அப்போது உங்கள் பைல்கள், இமெயில் செய்திகள் என எதனையும் பார்க்கலாம். ஏன், உங்களுக்கே கூட அதே கம்ப்யூட்டரிலிருந்து இமெயில் அனுப்பலாம். எனவே, பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால், நீங்கள் கம்ப்யூட்டரை மூடிவிட்டு, விரும்பிய வகையில், வெளியே சென்று வரலாம். மேலும், கம்ப்யூட்டருக்கான பாஸ்வேர்டினை எப்போதும் நீக்கலாம் என்ற வசதியும் உள்ளதால், அதனை நாமாக நீக்க வேண்டாம் என்று நான் எண்ணுகிறேன். இருப்பினும், உங்கள் விருப்பத்திற்கான பதிலைத் தருகிறேன். லாக் ஆன் ஸ்கிரீன் தேவை இல்லை என்றால், முதலில் Advanced User Accounts என்ற டயலாக் பாக்ஸைப் பெற வேண்டும். இது, நீங்கள் என்ன விண்டோஸ் இயக்கம் பயன்படுத்துகிறீர்கள் என்பதனைப் பொறுத்தது. விண்டோஸ் 7 மற்றும் விஸ்டா எனில், ஸ்டார்ட் தொடங்கவும். பின்னர், netplwiz என டைப் செய்து என்டர் தட்டவும். விண்டோஸ் எக்ஸ்பி எனில், Start>Run சென்று, control user passwords2 என டைப் செய்து என்டர் தட்டவும். விண்டோஸ் 8 எனில், Search Charm பயன்படுத்தி netplwiz தேடவும். Apps பிரிவில், netplwiz என்பதன் மேல் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன், நீங்கள் எந்த அக்கவுண்ட் வழியாக பூட் செய்கிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு, Users must enter a user name and password என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்கையில், ஏற்கனவே கொண்டிருந்த பாஸ்வேர்டினை இருமுறை எண்டர் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அவ்வாறு செய்து, ஸ்கிரீனை மூடிவிடவும். இனிமேல், அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையில், எந்த பாஸ்வேர்டும் கொடுக்காமல், நேரடியாகக் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குச் சென்று விடலாம். இதன் பின்னரும் உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், பொதுவாக அது போல் நடைபெறாது, அது உங்கள் விண்டோஸ் சிஸ்டம் கேட்கும் பாஸ்வேர்ட் அல்ல. உங்கள் ஹார்ட்வேர் கேட்கும் பாஸ்வேர்ட் ஆகும். இதனை நிறுத்த செட் அப் ஸ்கிரீன் செல்ல வேண்டும். இணையத்தில் BIOS password எனப் போட்டு, உங்களுடைய பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரின் மாடல் எண் கொடுத்துப் பெறவும்.
Posted on: Sat, 16 Nov 2013 14:33:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015