கந்தசஷ்டி விரதம் – KANTHASASHTI - TopicsExpress



          

கந்தசஷ்டி விரதம் – KANTHASASHTI VIRATHAM அன்பார்ந்த பக்தர்களே, கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசிமாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவசித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். Dear Devotees, Kantha Sashti is celebrated by Saivites and Hindus to thank Lord Muruga to have destroyed Asura Sooran. Sashti means SIX. Kantha Sashti Viratham is observed in Tamil month ‘Aipasi’ for six days during ‘Sukla Padcha starting from Pirathamai and ending with Sashti. During the end of six days war, Lord Murugan sent his powerful “Vel” towards Sooran which cut and divided his body into two parts. The parts were converted into a Cock and Peacock and used by Lord Murugan as His Flag and Vehicle respectively. This is an incident stated in Kantha Puranam. The characters, three Asuras: Singan, Tharagan, and Sooran are according to “Saiva Siththaantham” are reffered to our Ego, Actions and Illusion (Aanavam, Kanmam & Maya). Destroying Sooran is phylosopically meant to purify our Atma from the Aanavam Kanmam and Maya. Muruga Bhakthas yearly fast on these SIX days by getting up from bed in the early morning take bath, and pray at home if not possible to visit Temple. They fast during day time and have fruits/milk in the evening on all Six days On the Seventh day they break the fasting by offering “Paranai” food to relations and friends.. Nov.03 ஐப்பசி 18 Sun - ஞாயிறு கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் Kanthasashdi Viratham Begins Nov.08 ஐப்பசி 23 Fri - வெள்ளி கந்தசஷ்டி விரதம் முடிவு (சூரன்போர்) Kanthasashdi Viratham Ends (Sooranpoor) Nov.09 ஐப்பசி 24 Sat - சனி முருகன் திருக்கல்யாணம் Murugan Thirukalyaanam விசேட அபிஷேக பூசை நேரங்கள்: Abisheka – Pooja Timings மாலை 5.30PM : அபிஷேகம் (Abishekam) மாலை 7.00 PM - 8.00PM : கூட்டுப்பிரார்த்தனை (Group Prayers) மாலை 8.00 PM: விசேட பூசை (Special Pooja) மாலை 9.00 PM : பிரசாதம் வழ்ங்கல் (Distribution of Pirasatham) Aum Namachivaaya! Board of Directors, Ottawa Sivan Temple
Posted on: Mon, 04 Nov 2013 15:20:38 +0000

Trending Topics



press.com/Jai-envie-de-vous-poster-des-facts-donc-je-le-fais-topic-635649663144462">Jai envie de vous poster des facts donc je le fais :) ✖
Christy Prior, together with her support team, has made the
Happy Monday! The 2014 North West Festival Pilbara Weekender

Recently Viewed Topics




© 2015