டிசம்பர் 3 புனித - TopicsExpress



          

டிசம்பர் 3 புனித பிரான்சிஸ் சவேரியார் மறைப்பணியாளர் இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா முதல் வாசகம் ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3 ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் `புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். `நேர்மையின் தேவதாருகள் என்றும் `தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை என்றும் அவர்கள் பெயர் பெறுவர். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15) பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். அல்லது: அல்லேலூயா. 1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி 2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி இரண்டாம் வாசகம் நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 16-19, 22-23 சகோதரர் சகோதரிகளே, நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப் பாக இருக்கிறது. அப்படியானால், எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மன நிறைவே அக்கைம்மாறு; நான் நற்செய்தி அறிவிப்போருக்குரிய உரிமையைக் கொஞ்சம்கூடப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக்கொண்டேன். வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன். நற்செய்தியால் வரும் ஆசியில் பங்கு பெறவேண்டி நற்செய்திக்காக எல்லாவற்றையும் செய்கிறேன். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 28: 19ய,20b அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20 அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. சிந்தனை இறுதி நாளில் நம்முடைய உடல் உள்ளம், ஆவி, ஆன்மா இந்த நான்கையும் குற்றமில்லாத நிலையில் ஒப்புக் கொடுத்திட வேண்டும் என்கின்ற அழைப்பை பெறுகின்றோம். 01 தெச 05: 23 ஆன்மாவை இழந்தால் அதனால் என்ன பயன்? வறுமையை போக்க வளமையை சேர்க்க, இன்றைக்கு பொருள் ஈட்ட பல முனைப்பான வழிகளை தேட தெரிந்த மனிதன், இன்றையக் காலக்கட்டத்தில் ஆன்ம வறுமையோடு வாழ்ந்து வருவதாலேயே, தெய்வபயமின்றி வாழ முற்படுகின்றான். இதுவே அவனை நோயாளியாக்குகின்றது. இந்த ஆன்ம வறுமையை போக்க அருமருந்தாகிய நற்கருணையை வாய்ப்புள்ள போதெல்லாம் பெற்றுக் கொள்வதோடு, செப வாழ்வு நம்முடையதாகும் போது ஆன்மா வளமாகும். Compassion, my dear Brother, is preferable to cleanliness. - Saint Martin de Porres
Posted on: Tue, 03 Dec 2013 02:51:08 +0000

Trending Topics



troyed-by-dishonest-topic-10201919364054174">Those whose lives and careers have been destroyed by dishonest
Bueno, Finalizó otra batalla, Semifinales de 1500 mts.

Recently Viewed Topics




© 2015