தமிழில் வெளியாகிறது - TopicsExpress



          

தமிழில் வெளியாகிறது மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ்! Posted by: Mathi Updated: Wednesday, August 21, 2013, 15:02 [IST] Ads by Google Borderless Prepaid Card Smartest Way To Carry Money Abroad. Toll Free Assistance -80 Countries. thomascook.in/Forex Multicity Cheque Book IDBI Bank Current Account Apply Today! idbiflexicurrentaccount தமிழில் வெளியாகிறது மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ்! சென்னை: இணைய பக்கங்களை பார்வையிட நாம் அதிகம் பயன்படுத்தக் கூடிய ப்ரெளசரான மொசில்லா ஃப்யர் பாக்ஸ் இனி தமிழிலேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கணிணி பயன்பாடும் இணைய பயன்பாடும் அதிகரிக்க அதிகரிக்க மென்பொருட்களின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றன. இருப்பினும் அது வெற்றிகரமானதாக வலம் வந்துவிடவில்லை. தற்போது 10 பொறியாளர்களைக் கொண்ட குழுவினர் மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் ப்ரெளசரின் கட்டளை சொற்களை தமிழுக்கு மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதில் file என்பதற்கு கோப்பு, preferences என்பதற்கு விருப்பங்கள் என்றும் copy என்பதற்கு நகல் எடு என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொசில்லா ஃபயர் ஃபாக்ஸானது 120 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் சில இந்திய மொழிகளும் அடங்கும். இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட மொசில்லா ஃபயர் ஃபாக்ஸ் அடுத்த 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்பட இருக்கிறது. Read more at: tamil.oneindia.in/news/2013/08/21/tamilnadu-soon-mozilla-firefox-tamil-181717.html
Posted on: Wed, 21 Aug 2013 10:04:06 +0000

Trending Topics




© 2015